ஆன்லைன் டேட்டிங் தளமான `Tinder’-க்கு அடிமையாகி, சிகிச்சை பெருமளவுக்கு ஒருவர் சென்ற சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கவனத்தையும் உடல்நலத்தையும் சிதறடிக்கக்கூடிய ஆயுதம் நம் கைகளிலேயே மொபைல் போன் வடிவத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா என மொபைலை திறந்தாலே மணிக்கணக்கில் நேரம் விழுங்கப்படுகிறது. இப்படி டேட்டிங் ஆப்பில் தனது மனநலத்தை ஒருவர் தொலைத்திருக்கிறார்.
இன்றைய சூழலில் பிரபலமாக அறியப்படும் ஒரு டேட்டிங் ஆப் `Tinder’. இந்த ஆப் மூலமாக தெரியாத நபர்களைத் தொடர்பு கொண்டு பேசி, சந்தித்து, அவர்களுடன் பழகி உறவை வளர்த்துக் கொள்ள முடியும். தங்களுக்குப் பொருத்தமான நபர்களை அவர்களின் புரொஃபைல் பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்காக இடது அல்லது வலது புறமாக ஸ்வைப் செய்தால் போதும், பலரின் புரொஃபைல் வந்தவண்ணம் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கானோர் இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
பிரிட்டிஷை சேர்ந்த ஒருவர், இந்த ஆப்பை பயன்படுத்தி தனது புரொஃபைலை எத்தனை பெண்கள் லைக் செய்கிறார்கள் என்பதை அறிய முயன்றுள்ளார். அவருக்கு பெரும்பாலும் பெண்களைச் சந்திப்பதிலோ, தனக்கான பொருத்தமான பெண்ணை காண்பதிலோ விருப்பம் இல்லை.
தன்னுடைய புரொஃபைலுக்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்பதில் மட்டும் மனம் குதூகலித்து இருக்கிறது. இதற்காக அதிக புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். ஒரே நேரத்தில் 10 பெண்களோடு பேசுவார், அவர்கள் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
யாரையாவது வெளியே அழைத்து அவர்களுடன் இணக்கமாகி உறவில் இருந்தாலும் அது அவருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் ஆப்பிற்கு சென்று புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருநாளைக்கு 500 புரொஃபைல்களை ஸ்வைப் செய்யும் அளவிற்கு அடிமையாகி உள்ளார்.
அதனை தொடர்ந்து டிப்ரெஷன் மற்றும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் (Depression and Borderline personality disorder) என்ற மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர், டேட்டிங் ஆப்பை பயன்படுத்துவதை தற்போது முற்றிலும் நிறுத்தியுள்ளார்.
இது குறித்து அந்த நபர் கூறுகையில், ``நான் எல்லோருடைய புரொஃபைலையும் வலதுபுறமாக ஸ்வைப் செய்து, விளையாட்டில் முழுமையாக மூழ்கியதால், என் சுய உணர்வை இழந்தேன். ஒரு பெண் எனது மெசேஜுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அது என்னை மிகவும் பாதித்தது. இது போன்ற ஆப்கள் எனது முழு மனநிலையையும் பர்சனாலிட்டியையும் பாதித்தது’’ என்று கூறியுள்ளார்.
உங்கள் நேரத்தை அதிகம் திருடும் ஆப் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!
Comments
Post a Comment