Skip to main content

Posts

Showing posts from April, 2023

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" - ஆபரேஷன் SABS - கிசுகிசு: அடுக்குமாடி வீடு: கவனிக்க...

"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" வைகோ அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. '30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது' என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இக்கடிதம் குறித்து நம்மிடம் பேசிய சு.துரைசாமி, " எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுகவில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது" எனக் குற்றம் சாட்டி உள்ளார். வைகோ மீதான அதிருப்திக்கு சு.துரைசாமி கூறும் காரணங்களையும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க... மேலும், வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன? படிக்க இங்கே க்ளிக் செய்க... ஆபரேஷன் SABS... டீ குடித்தவரைத் தூக்கிய திருச்சி டீம்! ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்? ...

சுயநினைவை இழந்த ஓட்டுநர், 66 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் (Warren) நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார். இருந்த போதும் அவரால் இயலவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆள்களை அழைத்திருக்கிறார். டில்லன் ரீவ்ஸ்``40 வருஷமா மூணு சக்கர வண்டி ஓட்டுறேன்!’’ - 70 வயது எனர்ஜி டானிக் கண்ணம்மா செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக இதனைக் கண்ட டில்லன் ரீவ்ஸ் என்ற 7-ம் வகுப்பு மாணவர், துரிதமாகச் செயல்பட்டு ஸ்டியரிங்கை பிடித்து, பிரேக்கில் கால் வைத்து அழுத்தியிருக்கிறார். வண்டி நின்றதும் உடனடியாக அவரச உதவி எண்ணுக்கு அழையுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  ஓட்டுநரின் உடல்நலக் குறைவிற்கான பிரச்னை என்னவென்று த...

`வழக்கு பதிந்தால் மட்டும் போதுமா... நீதி?!' - மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடரக் காரணமென்ன?

`இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தான் பதவிவகித்த 2012-2022 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒரு சிறுமி உட்பட 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அவரைக் கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்!' எனக் கோரி பலமாதங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய மல்யுத்த வீரர்கள். நீண்டப் போராட்டம், நீதிமன்றத்தின் அழுத்தம் உள்ளிட்டக் காரணங்களால் தற்போது பிரிஜ் பூஷண்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், `அவரைக் கைதுசெய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும்' என மல்யுத்த வீரர்கள் உறுதியாக நிற்கின்றனர். அவர்களின் நீதிகேட்கும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்துவருகிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் - பாஜக போராட்டத்தின் பின்னணி: கடந்த ஜனவரி 18-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கிய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ``இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும் உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் தொடர்ந்து இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல்...

"தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்றால், கரூரில் தனிச் சட்டம்!"- செந்தில் பாலாஜியைச் சாடும் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட்டில், குளித்தலை நகர அ.தி.மு.க சார்பில் பொதுமக்களின் கோடை வெப்பத்தைத் தணிக்கும்பொருட்டு, தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் நகர அ.தி.மு.க ஐடி விங் துணைத் தலைவர் கார்த்திக்மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். கரூர்: ஒரே பெண்ணைக் காதலித்த இருவர்; கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது! பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தி.மு.க அரசு, தமிழக முதல்வர் குறித்தும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது விருந்து அளிப்பது குறித்த தி.மு.க அரசின் அறிவிப்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பியதாகக் கூறி, கரூர் நகர காவல்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கின்றனர். அதோடு, அவரைக் கைதுசெய்து 6 மணி நேரம் கடந்தும், அவர் எங்கிருக்கிறார் என தகவல் தெரிவிக்க மறுத்த காவல்துறையினர், கரூர் நீதிமன்றத்தில் ஆ...

Doctor Vikatan: கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை... உடல் முழுவதும் அரிப்பு... தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 59. ரத்தச்சர்க்கரை அளவு 270. உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாக உள்ளது. ரத்த அளவு 10 ஆக உள்ளது. கொழுப்பும் உள்ளது. என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? - Rasheed, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. மருத்துவர் சஃபி ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஹீமோகுளோபின் அளவா அல்லது HbA1c எனப்படும் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவா என்று தெரியவில்லை. ஒருவேளை அது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் இந்த அளவானது மிக ஆபத்தானது. அதாவது உங்களுக்கு ரத்தச் சர்க்கரையானது கட்டுக்கடங்காமல் இருக்கிறது என அர்த்தம். கட்டுப்படுத்தவியலாத நீரிழிவு பாதிப்பில் ஒருவருக்கு ஸ்கின் டர்கர் (Skin turgor) எனப்படும் சருமத்தின் மீள்தன்மை பாதிக்கப்படும். அதன் காரணமாக சருமத்தின் ஈரப்பதமானது குறைந்திருக்கும். சருமத்தில் ஈரப்பதம் குறையும்போது உடல் முழுவதும் வெடிப்பு போல ஏற்படலாம. அதன் தொடர்ச்சியாக அரிப்பும் ஏற்படலாம். எனவே இது குறித்து நீங்கள் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ச...

KKRvGT: `குறுக்க இந்த விஜய் வந்தா..' - வேட்டையாடிய விஜய் சங்கர்; வீழ்ந்துபோன கொல்கத்தா!

விஜய் சங்கரால் இரக்கமேயின்றி சூறையாடப்பட்ட வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவர் இரு புள்ளிகளை குஜராத்தின் கணக்கில் வரவு வைத்தது. ஆடிய 7 போட்டிகளில் பாண்டியாவின் படை தோல்விமுகம் கண்டிருந்தது இரண்டில் மட்டுமே. அதில் ஒன்று மறக்கவே முடியாத ரிங்குவின் சிக்ஸர் அடைமழையால் நேர்ந்திருந்தது. எனவே வாங்கிய வலியை வட்டியோடு திருப்பித் தரும் வழிமுறைகளோடு களமிறங்கியது குஜராத். KKRvGT டாஸுக்கு முன்பே குறுக்கிட்ட சாரலாலும், மேகம் சூழ்ந்த சூழலாலும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் பாண்டியா. கேகேஆரின் பக்கமோ ஜேசன் ராயின் காயம் குர்பாஸினை பிளேயிங் லெவனுக்குள் இழுத்து வந்திருந்தது. இதன் பின்விளைவுகள்தான் முதல் பாதியில் ஒட்டுமொத்த அணியையும் தாங்கிப்பிடித்தன. டெத் ஓவர் வரை அணியைக் கைப்பிடித்து குர்பாஸ் அழைத்துச் செல்ல அதன்பிறகு இறுதிக்கட்ட பணிகளை ரசலின் பவர் ஹிட்டிங் பார்த்துக் கொண்டது. குர்பாஸ் குர்பாஸ் மற்றும் ரசல் தாங்கள் சந்தித்த 58 பந்துகளில் மொத்தமாக 115 ரன்களைக் குவித்திருந்தனர். ஆகமொத்தம் உதிரிகளையும் நீக்கிக் கணக்கிட்டால் மீதமிருந்த 62 பந்துகளில் மற்ற வீரர்கள் இணைந்து எடுத்த ரன்கள் 61 மட்டுமே. ஆக இந்த...

Doctor Vikatan: கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை... உடல் முழுவதும் அரிப்பு... தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 59. ரத்தச்சர்க்கரை அளவு 270. உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாக உள்ளது. ரத்த அளவு 10 ஆக உள்ளது. கொழுப்பும் உள்ளது. என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? - Rasheed, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. மருத்துவர் சஃபி ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஹீமோகுளோபின் அளவா அல்லது HbA1c எனப்படும் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவா என்று தெரியவில்லை. ஒருவேளை அது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் இந்த அளவானது மிக ஆபத்தானது. அதாவது உங்களுக்கு ரத்தச் சர்க்கரையானது கட்டுக்கடங்காமல் இருக்கிறது என அர்த்தம். கட்டுப்படுத்தவியலாத நீரிழிவு பாதிப்பில் ஒருவருக்கு ஸ்கின் டர்கர் (Skin turgor) எனப்படும் சருமத்தின் மீள்தன்மை பாதிக்கப்படும். அதன் காரணமாக சருமத்தின் ஈரப்பதமானது குறைந்திருக்கும். சருமத்தில் ஈரப்பதம் குறையும்போது உடல் முழுவதும் வெடிப்பு போல ஏற்படலாம. அதன் தொடர்ச்சியாக அரிப்பும் ஏற்படலாம். எனவே இது குறித்து நீங்கள் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ச...

``எல்லோருக்கும் தேசத்துரோகச் சான்றிதழ்; புல்வாமா தாக்குதலுக்கு பதில் வேண்டும்!" - சுப்ரியா ஸ்ரீனேட்

"எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டும்" என அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான தகவல்களைக் கூறியிருக்கிறார். இது குறித்து மோடி அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதில், 'வீரர்கள் விமானத்தில் ஏன் அனுப்பப்படவில்லை?; எல்லைக்கு மிக அருகில் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து எப்படி பதுக்கி வைக்கப்பட்டது?; பிரதான சாலையைச் சந்திக்கும் மற்ற சாலைகள் ஏன் மூடப்படவில்லை?; ஜெ.இ.எம்- இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக பல உளவுத்தகவல்கள் வந்த பின்பும் அந்தச் சாலையில் செல்ல வீரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?; டி.எஸ்.பி தேவேந்திர சிங் இன்று எங்கிருக்கிறார்?' உள்ளிட்ட சந்தேகங்கள் இருக்கின்றன. சத்யபால் மாலிக் இது மோடி அரசின் அலட்சியம் மற...

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து | 8 மாதங்களில் 1,000 நிலநடுக்கங்கள் பதிவு - உலகச் செய்திகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 1,000 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவுசெய்யப்பட்டதாக, Seismological Research Letters ஜர்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கயிர்பூர் என்ற இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் தீப்பிடித்தது. இதில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். புகழ்பெற்ற விளையாட்டு சேனலான ESPN -ன் தொகுப்பாளர் Marly Rivera, ஒரு நிகழ்ச்சியின்போது சக தொகுப்பாளரான Ivón Gaete -யிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் இந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சூடானின் தலைநகரான கார்ட்டூமில், ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதுவரை, இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 512-ஆக உயர்ந்திருக்கிறது. புகழ்பெற்ற 'ஜெரி ஸ்ப்ரிங்கர் ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சின்சினாட்டியின் முன்னாள் மேயருமான Jerry Springer காலமானார். அவருக்கு வயது 79. அமெரிக்காவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் வல...

`ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி?' - வலுக்கும் எதிர்ப்பு... பின்னணி என்ன?

2018-ம் ஆண்டும் மே மாதம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 99 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தில் 100-வது நாளில் போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பங்களால் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் . பல நூறு பேர் கலவரத்தின்போது படுகாயமடைந்தனர். அதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது வேதாந்தா குழுமம். ஆகவே அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் மன்றாடி வருகிறது. ஆனால் எந்த முயற்சிகளும் கதைக்கு ஆகவில்லை. ஆகவே 2022 ஜூன் மாதம் தாமிர தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை விற்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது ஸ்டெர்லைட் நிறுவனம். இந்நிலையில் சமீபத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனினும் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான அனும...

Doctor Vikatan: தினமும் காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: தினமும் காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன் பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை தலைவலி என்பது பல விஷயங்களை உணர்த்தும் ஓர் அறிகுறி. தலைவலியில் பல வகைகள் உள்ளது பற்றி அறிந்திருப்பீர்கள். தலையைச் சுற்றி மொத்தமாக வலிப்பதை டென்ஷன் தலைவலி என்போம். கொத்துத் தலைவலி என ஒன்று உண்டு. கண்களைச் சுற்றி மட்டும் வலிக்கும்... கண்ணீரும் வரும். ஒரு பக்கத்தில் மட்டும் வலியை உணரச் செய்கிற ஒற்றைத் தலைவலி... அதை மைக்ரேன் என்று சொல்வோம். இவை தவிர, தலையில் இடி இடிப்பதைப் போன்ற வலி ஒன்று சிலருக்கு வரும். அதை Thunderclap headache என்று சொல்வோம். இது சற்றே சீரியஸாக அணுக வேண்டியது. இவை தவிர்த்து, கழுத்திலும் முதுகிலும் வலியை உணரச் செய்கிற ஸ்பைனல் தலைவலி (Spinal headache) என ஒன்று உண்டு. இப்படி தலைவலியில் பல வகை உண்டு. காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறது என்ற உங்களுடைய கவலைக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு வருவது எப்படிப்பட்ட தலைவலி என்று கண்டுபிடித்து, அ...

'நிலக்கரி ஊழலில் சிக்கும் அதிகாரிகள்' - தமிழக மின்வாரியத்தில் என்ன நடக்கிறது?

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி வீட்டு மின் இணைப்பு 2.35 கோடி, வணிகம் 37 லட்சம், தொழிற்சாலை 7 லட்சம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 3.31 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. மாநிலத்தின் உட்சபட்ச மின்தேவையின் அளவு 15,000 மெகாவாட்டுக்கு மேல் இருக்கிறது. அனல் மின் நிலையம் இதற்கு தேவையான மின்சாரம் அனல், சூரியசக்தி, காற்றாலை, நீர் மின் நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஆங்காங்கு இருக்கும் துணை மின்நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு அழுத்தம் குறைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் அனல் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவே அதிகமாகும். இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வாங்கப்படுகிறது. நிலக்கரி பிறகு கப்பல்கள் மூலமாக உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908...

வெளிநாட்டு முதலீட்டுக்காக, சொந்த மக்களை பலி தருவதா?

‘ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை... வாரத்துக்கு மூன்று நாள்கள் விடுமுறை’ எனச் சட்டமன்றத்தில் வேகவேகமாக ஒரு மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது தி.மு.க அரசு. ஆனால், கூட்டணிக் கட்சிகளே கொந்தளித்து போர்ப்பரணி பாட ஆரம்பித்ததுடன், மாநிலம் முழுக்கவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அத்துடன், தி.மு.க அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இதைத் தொடர்ந்து, மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி ஒரு மசோதாவைக் கொண்டுவரும்முன், அனைத்துப் பிரிவினருடனும் கலந்தாலோசித்திருந்தால், இப்படி எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்திருக்காது. 12 மணி நேர வேலை என்பது புதிய விஷயம் அல்ல. இன்றைக்கு ஐ.டி நிறுவனங்களிலும், பலவிதமான தொழிற்சாலைகளிலும், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக வளாகங்களிலும் தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கவே செய்கின்றனர் பெரும்பாலான ஊழியர்கள். சட்டவிரோதமாக வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுபவர்கள்தான் இதில் அதிகம். இந்த நிலையில், 12 மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டுவிட்டால் 13, 14 மணி நேரம் என்று மேலும் மேலும் அந்தத் தொழிலாளர்களின் உழைப்பு உற...

தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த அமெரிக்க மாகாணம் | பாகிஸ்தானில் பரவும் குரங்கு அம்மை - உலகச் செய்திகள்

நீண்ட தூரம் தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகளை, 2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின் பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் குரங்கு அம்மை நோயால் முதல் நபர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் விசாரித்துவருகின்றனர். ஜோ பைடன் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் தேசியக்குழு பைடனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து பல அணுசக்தி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாக தென்கொரியாவுக்கு அனுப்பப்படுகிறது. வடகொரியாவின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் (Bishops Meeting) பெண்களும் வாக்களிக்க, போப் பிரான...

'அமித் ஷா - எடப்பாடி' அப்பாயின்ட்மென்ட், அட்வைஸ், அந்தர்பல்டி... டெல்லி டீல்! | Elangovan Explains

Tamil News Live Today: ``நடந்திருப்பது சாதாரண ஊழல் அல்ல; தமிழகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழல்” - நாராயணன் திருப்பதி

``தமிழகம் இது வரை கண்டிராத மிகப் பெரிய ஊழல்!”  தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``சௌத் இந்தியன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தை கடந்த பல வருடங்களாக மோசடி செய்து வந்துள்ளது அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் தெரிய வந்துள்ளது. நிலக்கரி கையாள்வதில் இது வரை 360 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு தொகையை அமலாக்கத்துறை முடக்கியுள்ள நிலையில், மேலும் 1000 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஊழல் தொகையோடு இதற்கான வட்டியை சேர்த்தால் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலின் மதிப்பு உயரும். மேற்கண்ட இரு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து 2001 முதல் மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பல அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், அரசியல்வாதிகளின் பின்புலமில்லாமல் இவை தொடர்ந்திருக்க சாத்தியமே இல்லை. தமிழகம் ஊழலில் மூழ்கி திளைத்திருக்கிறது என்று நாம் தொடர்ந்து கூறிய போதெல்லாம் 'தமிழ், தமிழன், தமிழ் நாடு, மாநில சுயாட்சி' என்று உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை கொள்ளையடித்துக் கொண்டிரு...

Doctor Vikatan: தொடர்ச்சியான ஏப்பம்; வெளியிடங்களில் தர்மசங்கடம்... தவிர்க்க வழி உண்டா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார். இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார் Doctor Vikatan: முழங்கை மூட்டில் வலி... எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது, அது வெளியே வரும்போது ஏப்பமாக வெளியேறுகிறது. ஏப்பம் வர வேறு சில காரணங்களும் இருக்கலாம். கார்பனேட்டடு பானங்கள், குளிர் பானங்கள் அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை, குறிப்பாக புரொக்கோலி, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடும்போதும் சிலருக்கு ஏப்பம் அதிகம் வரலாம். இவை தவிர அதிகம் அமிலம் சுரக்கும...

Doctor Vikatan: தொடர்ச்சியான ஏப்பம்; வெளியிடங்களில் தர்மசங்கடம்... தவிர்க்க வழி உண்டா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார். இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார் Doctor Vikatan: முழங்கை மூட்டில் வலி... எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது, அது வெளியே வரும்போது ஏப்பமாக வெளியேறுகிறது. ஏப்பம் வர வேறு சில காரணங்களும் இருக்கலாம். கார்பனேட்டடு பானங்கள், குளிர் பானங்கள் அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை, குறிப்பாக புரொக்கோலி, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடும்போதும் சிலருக்கு ஏப்பம் அதிகம் வரலாம். இவை தவிர அதிகம் அமிலம் சுரக்கும...

Yashasvi Jaiswal: `பானிபூரி விற்ற சிறுவன் டு பயமறியா தொடக்க வீரன்'- ஜெய்ஸ்வால் குட்டி கங்குலியான கதை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்களை 43 பந்துகளில் எடுத்து அசத்தினார், யாஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது 21வது வயதில் இப்படியொரு வியக்கத்தக்க இன்னிங்ஸை ஆடியிருக்கின்றார். இவரின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் ரன்கள் தாறுமாறாக வந்தது. குட்டி கங்குலியைப் போல காட்சியளித்த ஜெய்ஸ்வால் ஏறக்குறைய கங்குலி எதிரணியினருக்கு எந்தளவுக்கு மிரட்சியை கொடுப்பாரோ அதே அளவுக்கான மிரட்சியை கொடுத்திருந்தார். ஐ.பி.எல் எனும் பெரும் வெளிச்சத்தில் இன்று மிளிரும் ஜெய்ஸ்வாலின் பின்னணி அத்தனை பிரகாசமானது கிடையாது. இந்த இடத்தை அவர் அடைய கடந்து வந்த பாதை கரடு முரடானது. Yashswi மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்த ஜெய்ஸ்வால், கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியாக பற்றிக் கொண்டு தன்னம்பிக்கையுடனும் பெரும் உந்துதலுடனும் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர், 28 டிசம்பர் 2001 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் சூரியவான் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையான பூபேந்திர ஜெய்ஸ்வால் ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது தாயார் கஞ்சன் ஜெய்ஸ்வால். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகளில் ந...

தமிழக பாஜக-விடம் ஒரு முகம்; டெல்லியிடம் ஒரு முகம்... எடப்பாடி - அமித் ஷா  சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பெரிய பட்டாளத்துடன் டெல்லி சென்று திரும்பியிருக்கிறார். 'எடப்பாடி' பழனிசாமி பொதுச் செயலாளரான பின்னர், முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்து இருக்கிறார் என்று தகவல் நமக்கு கிடைக்கிறது. அத்தோடு, அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க தலைவர்களிடம் அமித் ஷா பேசியது புதிய விவாதங்களை கிளப்பிவிட்டு இருக்கிறது. இதுகுறித்து எடப்பாடியுடம் டெல்லி சென்ற சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அச்சாரம் போட்டு இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் கொழுந்துவிட்டு எரியும் பி.டி.ஆர் ஆடியோ, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதான ஐ.டி ரெய்டு உள்ளிட்டவை குறித்த பைல்களை, அமித் ஷாவிடம் வழங்கினார் எடப்பாடி. எல்...

பிடிஎஸ் பாடகரை போல் மாற விரும்பிய நடிகர் - அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS. உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஏழு பேர் கொண்ட இந்தக் குழு பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். இவர்களின் பாடல் வரிகள் சமூகவலைதளங்களில் மிக பிரபலம். இவர்களின் படைப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தக் குழு உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பாடல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். BTS இந்நிலையில் இந்தக் குழுவைச் சேர்ந்த பாடகரான ஜிமினை போல தோற்றமளிக்க விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் செயின்ட் வான், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதனால் ஏற்பட்ட விளைவுகளால் தற்போது உயிரிழந்துள்ளார். 22 வயதான செயின்ட் வான், கனடாவில் பிறந்து, தன் இசைத்துறை மற்றும் தொழிலுக்காக தென்கொரியாவுக்கு குடிபெயர்ந்தார். கடந்தாண்டு, தன் முகத்தை மாற்றுவதற்காக இவர் 12 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இதில் மூக்கை அழகாக்குதல், முகம், புருவம், கண்களை உயர்த்ததல், உதடு குறைப்பு ஆகியன அடங்கும். இதற்காக அவர் 2,20,000 டாலர் செலவிட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ. 1.80 கோடி. கடந்த ஏப்ரல் 22-ம...

RCBvKKR: `KGF -ல் ராக்கி பாய் மட்டும் போதுமா?' - அதே ஆர்சிபி அதே பிரச்சனைகள்; என்ன நடந்தது?

எட்டு பேட்டிங் வீரர்களுடன் வரும் அணிகளே வெற்றிக்கு தத்தித் தடுமாறும் நிலையில் இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே மூன்று வீரர்களை மட்டும் நம்பி வந்து கொண்டிருக்கிறது பெங்களூரு. மூன்றில் இரண்டு பேர் நேற்று கொஞ்சம் வேகமாக நடையைக் கட்ட கொல்கத்தாவிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது பெங்களூரு. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முந்தைய ஸ்குவாடுகளில் இருந்து ஒரே ஒரு மாற்றமாக கொல்கத்தா அணியில் கெஜ்ரோலியாவுக்கு பதிலாக வைபவ் அரோரா வந்திருந்தார். டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய்‌ மற்றும் தமிழகத்தின் ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் தந்தனர். சின்னசாமி மைதானத்தின் அளவுகள் ஜேசன் ராய்க்கு மிகவும் பிடித்துப் போக எடுத்த எடுப்பிலிருந்தே பவுண்டரிகள் பறந்தன. அதுவும் ஆறாவது ஓவர் வீசிய ஷபாஷ் அகமத் ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ரன்களை ஒரே ஓவரில் எடுத்தார் ராய். RCBvKKR ஒரு பக்கம் ராய் அதி வேகத்தில் ரன்கள் எடுக்க மறுபக்கம் ஜெகதீசனோ அமைதியின் உருவமாய் ஆடினார். வேகமாக ஆடி பந்துக்கு எதுவும் வலித்து விடுமோ என...