அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 1,000 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவுசெய்யப்பட்டதாக, Seismological Research Letters ஜர்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் கயிர்பூர் என்ற இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் தீப்பிடித்தது. இதில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
புகழ்பெற்ற விளையாட்டு சேனலான ESPN -ன் தொகுப்பாளர் Marly Rivera, ஒரு நிகழ்ச்சியின்போது சக தொகுப்பாளரான Ivón Gaete -யிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் இந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
சூடானின் தலைநகரான கார்ட்டூமில், ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதுவரை, இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 512-ஆக உயர்ந்திருக்கிறது.
புகழ்பெற்ற 'ஜெரி ஸ்ப்ரிங்கர் ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சின்சினாட்டியின் முன்னாள் மேயருமான Jerry Springer காலமானார். அவருக்கு வயது 79.
அமெரிக்காவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய பெற்றோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். குழந்தைகளை டாட்டூ போட அவர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவால்ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க , உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் அறிவித்தப்படி, 1,550 ஆயுத வாகனங்களையும், 230 டாங்குகளையும் வழங்கியிருப்பதாக நேட்டோவின் தலைவரான Jens Stoltenberg அறிவித்திருக்கிறார்.
புகழ்பெற்ற 'குயின் ' இசைக்குழுவின் பாடகரும், பாடலாசிரியருமான ஃபிரெடி மெர்குரியின் 'ஷாட்பேண்ட்ஸ்' (Hotpants) ஒன்று ஏலத்தில் சுமார் 18,000 பவுண்டுகளுக்குப் பிரிட்டனில் விற்கப்பட்டது.
1703-ல் தொடங்கப்பட்ட உலகின் பழைமையான நாளிதழ்களில் ஒன்றான Wiener Zeitung, அதன் அச்சுப் பதிப்பகத்தை நிறுத்திவிட்டு, இணையவழி சேவையைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறது. இதுவே உலகின் பழைமையான நாளிதழ்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாசி முகாம்களில் காவலாளியாக இருந்த Josef Schuetz தன்னுடைய 102-வது வயதில் காலமானார். கடந்த ஆண்டுதான், இவரின் போர்க் குற்றங்களுக்காக ஐந்து வருடங்கள் இவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
http://dlvr.it/SnG0KC
http://dlvr.it/SnG0KC
Comments
Post a Comment