நடப்பு 2023-ம் ஆண்டில், உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு பாதிஅளவுக்கு இருக்கும் என்று, சீனாவை சேர்ந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவா என்ற இடத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் வருடாந்திர அமர்வின்போது, பெய்ஜிங்கை சேர்ந்த அதிகாரபூர்வ சிந்தனைக்குழுவான Boao Forum for Asia (BFA), ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.Boao யு.பி.ஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிக்கவில்லை..! மத்திய அரசு நிறுவனம் விளக்கம்! அந்த அறிக்கையில், `உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆசியா, ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரமாக, 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் உலக வளர்ச்சியில் பாதியளவு பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் கொண்டிருக்கும். நடப்பு 2023-ம் ஆண்டில், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் வேகத்தை, ஆசியப் பொருளாதாரமானது விரைவுபடுத்துகிறது. உலகப் பொருளாதார மந்தநிலையில் ஆசியப் பொருளாதாரம் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும்' என்று `ஆசியப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு ...