Skip to main content

கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்த எப்படி காரணமாகிறது, கருத்தடைக்கு வேறு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்.

மருத்துவர் அபிநயா

மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும்போது, இது இனப்பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் கர்ப்பப்பையில் கருவைத் தங்கவிடாது. நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இந்த ஹார்மோன் மாத்திரைகள் சற்று வித்தியாசமானவை. இதற்கு நம் உடலில் உள்ள சில திசுக்கள் சாதாரணமாக வினையாற்றினாலும், சில திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்.

ஹார்மோன் மாத்திரைகள் கர்ப்பப்பை, இனப்பெருக்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் வினையாற்றும். மேலும் இனப்பெருக்க உறுப்பு மற்றும் கர்ப்பப்பையை இந்த ஹார்மோன் மாத்திரைகள் பாதுகாக்கும். அதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

அதே நேரம் மார்பக திசுக்களை பொறுத்தவரை அவை இந்த ஹார்மோன் மாத்திரைகளுக்கு எதிர்வினையாற்றும். மேலும் இந்த ஹார்மோன் மாத்திரைகளின் அளவு வேறுபடும் பட்சத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு இது வழிவகுக்கிறது. 20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை பயன்படுத்தலாம். அவையே மருத்துவர்களாலும் பரிந்துரை செய்யப்படுகிறது.

மார்பக புற்றுநோய்

20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை ஓராண்டு வரை கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கருத்தடைக்கு, ஹார்மோன் மாத்திரைகளை தவிர, காப்பர் டி, மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஹார்மோன் ஊசி போன்றவற்றை பயன்படுத்தலாம்" என்றார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ், ``பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் நம் நாடு தான் முதலிடத்தில் இருந்தது. போதிய விழிப்புணர்வு, சிகிச்சை முறை காரணமாக அதன் தாக்கம் இப்போது குறைந்துள்ளது. ஆனால் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 28 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ்

வெளிப்புற காரணிகள், மாசு, உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை புற்றுநோய் காரணிகள் என்றாலும், பெரும்பாலும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது இது உருவாகிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இது பொருந்தும். உடல் பருமன், இயற்கையாக உடலில் உருவாகும் ஹார்மோன் குறைபாடு மற்றும் அதற்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹார்மோன் மாத்திரைகளும் மார்பக புற்றுநோய் உருவாகக் காரணிகளாக உள்ளன.

மிகவும் சிறு வயதில் பூப்படைவதும், 55 வயது வரைக்கும் மாதவிடாய் தொடர்வதும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே உடலில் சுரக்கும் புரோஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக நாள்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவது ஆகியன, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

cancer

புற்றுநோய் கட்டிகளில் ஆரம்ப காலத்தில் வலி இருக்காது. மார்புப் பகுதியில் இத்தகைய கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதலில் ஸ்கேன் மூலம் அந்த கட்டி பற்றி அறிந்து கொண்டு, புற்றுநோய் கட்டிக்கான சாத்தியக்கூறுகள் உண்டென்றால் ஊசி மூலம் FNAC சிகிச்சை செய்யப்படும். அதன் முடிவில் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.

மார்பகப் புற்றுநோய் மிகவும் மெதுவாகப் பரவும் தன்மை உடையது. ஒரு புற்றுநோய் செல் இரண்டாக 100 நாள்கள் எடுக்கிறது. இதன் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்திலும், 6 மாதங்கள் இடைவெளியின்றி சிகிச்சை மேற்கொள்வதன் மூலவும் 100 சதவிகிதம் நோயிலிருந்து மீளலாம்.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை முறை (கீமோதெரபி), ரேடியோதெராப்பி எனும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை முறை மட்டுமே போதுமானது. இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்.

Breast cancer awareness

புற்றுநோய் மட்டும் இன்றி, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களுக்குக் காரணம் நம் உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் மற்றும் அதிகக் கொழுப்பு தான். நாம் உட்கொள்ளும் அரிசி உணவானது உடனடியாகச் செரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உடையது. பெரும்பாலும் அரிசி உணவின் பயன்பாட்டை குறைத்து, சிறுதானிய உணவுகளை உட்கொள்வது நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...