அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாந்தர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிக அளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அமெரிக்க தேர்தலை மனதில் வைத்து அதிக அளவான பணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டும் உள்ளது. இவையெல்லாம் சேர்த்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தது.ஃபெடரல் வங்கிஅமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா?
தொடர்ந்து வட்டி உயர்வு..!
இதன் காரணமாகக் கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மாதத்துக்கு 0.75% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பதாவது முறையாக 0.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்க விகிதத்தை 2% என்ற அளவுக்கு கீழ் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. எட்டு முறை உயர்த்தப்பட்டபோதும் வட்டி விகிதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. தற்போது பிப்ரவரி மாத நிலவரப்படி பணவீக்க விகிதம் 6% என்று அளவில் உள்ளது. இது ஃபெடரல் வங்கியின் இலக்கைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
ஆனால், அதிகரித்த வட்டி விகிதம் காரணமாக அமெரிக்க வங்கி துறை அதிக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் திவால் ஆகின. இதன் காரணமாக ஃபெடரல் வங்கி திட்டமிட்டபடி வட்டி விகிதங்களை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதன் மூலம் அந்த எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் வெள்ளத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றுமா ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்?!
ஃபெடரல் வங்கியின் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் அமெரிக்கா வங்கிகள் ஸ்திர தன்மையுடன் இருப்பதாகவும் தேவையான பணப்புழக்கம் அமெரிக்க வங்கிகளுக்கு கிடைப்பதற்கு ஃபெடரல் வங்கி எப்போதும் துணை நிற்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தை வல்லுநர்களின் கணிப்பின்படி இன்னும் ஒரு முறை மட்டும் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு நீண்ட காலத்துக்கு வட்டி விகிதம் 5.25% நிர்ணயம் செய்யப்படும். பணவீக்க விகிதம் ஃபெடரல் வங்கி எதிர்பார்த்த அளவுக்கு குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படும்.
பிரிட்டனிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% சென்ற வாரத்தில் உயர்த்தப்பட்டது. நமது நாட்டிலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பண வீக்கத்துக்கு எதிரான போர் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதைத் தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகித உயர்வு நமக்கு உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது பங்குச் சந்தையும் ஏற்றத்தை சந்திக்கவில்லை. பங்குச் சந்தைகளில் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்த காரணத்தால் பலர் புதிய டீமேட் கணக்குகளைத் தொடங்கி தமது முதலீட்டை மேற்கொண்டனர். உணவுப் பஞ்சம், பொருளாதார நெருக்கடி... தவிக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உலக வங்கி!
அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதல் ஆண்டு மிகப்பெரிய லாபம் கிடைத்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான காலகட்டத்தை அவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்தக் காலகட்டங்களில் பங்குச் சந்தையில் ஈடுபட்ட பலர் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாகத் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்று டீமேட் கணக்குகளை மூடி வரும் தனி நபர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. பண வீக்க பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் இதே நிலைதான் சந்தையில் தொடரும் என்பதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
http://dlvr.it/SlbK5n
http://dlvr.it/SlbK5n
Comments
Post a Comment