நடப்பு 2023-ம் ஆண்டில், உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு பாதிஅளவுக்கு இருக்கும் என்று, சீனாவை சேர்ந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள போவா என்ற இடத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் வருடாந்திர அமர்வின்போது, பெய்ஜிங்கை சேர்ந்த அதிகாரபூர்வ சிந்தனைக்குழுவான Boao Forum for Asia (BFA), ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.Boao யு.பி.ஐ மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிக்கவில்லை..! மத்திய அரசு நிறுவனம் விளக்கம்!
அந்த அறிக்கையில், `உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆசியா, ஒரு முக்கியமான வளர்ச்சி இயந்திரமாக, 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் உலக வளர்ச்சியில் பாதியளவு பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் கொண்டிருக்கும்.
நடப்பு 2023-ம் ஆண்டில், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் வேகத்தை, ஆசியப் பொருளாதாரமானது விரைவுபடுத்துகிறது. உலகப் பொருளாதார மந்தநிலையில் ஆசியப் பொருளாதாரம் தனிச்சிறப்புமிக்கதாக இருக்கும்' என்று `ஆசியப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு முன்னேற்றம்' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Boao Forum for Asia Annual Conference 2023 (BFA 2023)மாறிவரும் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 3 வணிகத் துறைகள்..!
இந்த ஆண்டு உலக வளர்ச்சியில் பாதி பங்களிப்பை சீனாவும் இந்தியாவும் மட்டுமே வழங்கும் எனவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு 1 சதவிகித அதிகரிப்பும் ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கான உற்பத்தியில் தோராயமாக 0.3 சதவீதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆசியாவின் பிற பகுதிகளும் உலக வளர்ச்சியில் கால் பங்கு அளவுக்கு பங்களிப்பு செய்யக்கூடும் என்று, வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SlmK38
http://dlvr.it/SlmK38
Comments
Post a Comment