Doctor Vikatan: வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்க்கிறோம். மற்ற டெஸ்ட்டுகளை பொறுத்தவரை பிரச்னையில்லை. இதய நலனைப் பொறுத்தவரை, இசிஜி மட்டும் செய்கிறார்கள். அது மட்டுமே போதுமா... ஆஞ்சியோகிராம் தேவைப்படுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள பல பரிசோதனைகள் உள்ளன. டிரெட்மில் டெஸ்ட், இசிஜி, எக்கோ... என அவரவர் தேவைக்கேற்ப, மருத்துவர் பரிசோதனையைப் பரிந்துரைப்பார். மிகவும் எளிமையான டெஸ்ட் என்பதால் பலரும் இசிஜி பரிசோதனையைச் செய்து பார்க்கிறார்கள். இதில் சில விஷயங்கள் தெரியும், சிலது தெரியாது. 'வருடம் தவறாமல் நான் இசிஜி டெஸ்ட் செய்து பார்த்துவிடுகிறேன்... என் இதயம் நன்றாக இருக்கிறது' என சிலர் அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது சரியானதல்ல. அதே மாதிரிதான் எக்கோ டெஸ்ட்டும். அதைச் செய்கிறபோது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படியிருக்கிறது என்று தெரியும். ஆனால், ரத்தக் குழாய்கள் எப்படியிருக்கின்றன என்பது எக்கோ...