Skip to main content

Doctor Vikatan: ஆணுறுப்பின் முன்தோல் நீக்கம்... குழந்தைகளுக்கு ஏன் அவசியம்?

Doctor Vikatan: என் நண்பன், தன் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளான். குழந்தைப்பருவத்திலேயே அதைச் செய்வது பிற்காலத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்கிறான்.  குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது அவசியமா.... பிரச்னை வந்தால் செய்தால் போதாதா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

ஆணுறுப்பின் முன்தோல் நீக்குவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்தோல் இருப்பது ஆரோக்கியமற்றது என்பதிலும் முன்தோலை நீக்குவது ஆரோக்கியமானது என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் 'rudimentary organ' என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம்.  குடல்வால் எனச் சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில் எந்தச் செயலும் நடப்பதில்லை.

அப்படித்தான் ஆணுறுப்பின் முன்தோலும் அவசியமில்லாத ஒன்று. 'பைமோசிஸ்' (phimosis) என்ற நிலை உள்ள ஆண் குழந்தைகளுக்கு அதை நீக்க வேண்டியிருக்கும். அதாவது அந்தத் தோல் பகுதியை, பின்னோக்கி இழுக்க முடியாத நிலை இது. ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும். 

ஆண் குழந்தைகள் சிலருக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதியானது ஒட்டிக்கொண்டது போலிருக்கும்.

இப்படிப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தைகளுக்கு முன்தோல் நீக்கம் செய்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் உண்டு. முன்தோலை நீக்குவதன் (circumcision) மூலம் இந்தத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

பொதுவாகவே ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலில் நிறைய கிருமிகள் இருப்பது இயல்பானது.  கிருமித்தொற்றின் காரணமாக சிறுநீர்த் தொற்றும் வரலாம்.  அந்தப் பகுதியில் அப்படி பாக்டீரியாவோ, பூஞ்சையோ சேரவிடாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது. அதற்காக முன்தோலை நீக்குவது உண்டு.

உங்கள் நண்பர் சொன்னது மருத்துவ ரீதியாக சரிதான். ஆனாலும், அதைச் செய்வதும் தவிர்ப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. உங்கள் குழந்தைக்கு மருத்துவர் அதை அவசியம் எனப் பரிந்துரைத்தால், செய்வதில் தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...