Skip to main content

Doctor Vikatan: குளிரை அனுபவிக்க முடியாமல் படுத்தும் சளி, இருமல்... நிரந்தர தீர்வே இல்லையா?!

Doctor Vikatan: குளிர்காலம் என்பது பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்த காலம். ஆனால், குளிர் ஆரம்பித்த உடனேயே எனக்கு சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு எல்லாம் ஆரம்பித்துவிடும். குளிரின் சிலுசிலுப்பை அனுபவிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடும். இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்கள்....

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

மூலிகைமணி அபிராமி

மலைப்பிரதேசங்களிலோ, பனி பொழியும் வெளிநாடுகளிலோ இருப்பது போன்ற இதமான வானிலை நிலவுகிறது. ஆனால், எல்லோராலும் அதை அனுபவிக்க முடியாதது வருத்தம்தான். குட்டிக் குழந்தைகள், ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புள்ளவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் போன்றோரை வெளியே தலைகாட்ட விடாமல் முடக்கிப் போட்டிருக்கிறது இந்த வானிலை.

அடிக்கடி சளி பிடித்துக்கொள்வோரும் சரி, அப்படி இல்லாதவர்களும் சரி... எப்போதுமே பின்பற்றக்கூடிய எளிய வீட்டுவைத்திய முறைகளைச் செய்யலாம். கற்பூரவள்ளி இலைகளை 3 எண்ணிக்கையில் எடுத்துக் கழுவி, கைகளால் கசக்கிக் கொள்ளவும். அதை, கொதிக்கும் நீரில் போடவும்.  அதில் 2 ஏலக்காய்களையும் தட்டிப்போட்டு, வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வரலாம். ஜலதோஷம் வராமலிருக்க, தடுப்பு மருந்து போல இதைக் குடித்து வரலாம்.  'கல்போன்ற சளியைக் கரைக்கும் கற்பூரவள்ளி' என்றே சொல்வார்கள்.  கற்பூரவள்ளி இலைகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக நினைப்பவர்கள், அதற்கு பதில் வெற்றிலைகளைப் பயன்படுத்தியும் இதே மாதிரி செய்யலாம். நீரிழிவு இல்லாதவர்கள் தேன் கலந்து குடிக்கலாம், நீரிழிவு இருந்தால் அதைத் தவிர்க்கலாம்.

இருமல் இருப்பவர்களுக்கு ஆடாதொடை இலைகள் அருமருந்தாக இருக்கும். அந்த இலைகளையும் இரண்டு, மூன்று எடுத்துக் கழுவி, நசுக்கி, தண்ணீரில் போட்டு, கூடவே, இரண்டு ஏலக்காய், நான்கைந்து மிளகையும் தட்டிப்போட்டுக் கொதிக்க விடவும்.  இதை வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி கற்பூரவள்ளிக் குடிநீர், வெற்றிலைக் குடிநீர் அல்லது ஆடாதோடைக் குடிநீர் ஆகியவற்றை வாரத்தில் இரண்டு - மூன்று நாள்களுக்குக் குடித்து வந்தால் சளி, இருமல் வராமல் தடுக்கலாம். நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும். சளி கட்டாமல் இருக்கும், ஏற்கெனவே சளி இருந்தாலும் அதை வெளியேற்றும்.

'கல்போன்ற சளியைக் கரைக்கும் கற்பூரவள்ளி' என்றே சொல்வார்கள்.

அடுத்த மருந்து முசுமுசுக்கை இலை... பார்ப்பதற்கு கோவக்காய் இலைகள் போன்றே இருக்கும். நகரவாசிகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிராமங்களில் பரவலாகக் கிடைக்கும். இதை தோசை மாவு அல்லது அடை மாவுடன் அரைத்துச் சேர்த்துச் சாப்பிடலாம். குளிர்காலம் முழுவதுமே சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகமிக நல்லது. இதே போல முடக்கறுத்தான் கீரையையும் சாப்பிடலாம். கல்யாண முருங்கை இலையை அடையாகவோ, பஜ்ஜி போன்றோ செய்து சாப்பிடுவதும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

தூதுவளைக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இலைகளின் மேல் முள் இருக்கும். கவனமாகப் பார்த்து, சுத்தம் செய்து, வழக்கமாக துவையல் செய்யும் முறையில் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக் கோளாறுகள் வராமல் காத்துக்கொள்ளலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...