Doctor Vikatan: வருடந்தோறும் பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் ஒரு காயம் படுவதைத் தவிர்க்க முடியாதுதான். மற்ற காயங்கள் ஒன்றிரண்டு நாள்களில் குணமாகிவிடும். கண்களில் ஏற்படும் காயங்கள்தான் பயமுறுத்துகின்றன. பட்டாசுப் புகையோ, துகளோ கண்களில் படுவது என்பது அவ்வளவு பெரிய பிரச்னையை ஏற்படுத்துமா... இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் மற்ற எந்த நாள்களைவிடவும் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் அடுத்தடுத்த நாள்களில் கண் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை சற்று அதிகமிருக்கும். பட்டாசு வெடித்ததால் கண்களில் காயம்பட்டதாகச் சொல்லிக்கொண்டு வருவார்கள். சாதாரணமாக கண்கள் சிவப்பதில் தொடங்கி, விழித்திரை பாதிப்பு வரை இதன் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பட்டாசு, வெடிகளை வெடிப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களை, விபத்துகளைத் தவிர்க்கும் வழிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரைகள்தான் என்றாலும், ...