காலிஃப்ளவரை மிக்ஸியில் உதிர் உதிராக பொடித்து, அதை ஆவியில் வேக வைத்து குழம்பு, சைட் டிஷ்ஷாக இன்னும் சில காய்கறிகள் வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்கிற நம்பிக்கை, டயட் விரும்பிகளிடம் இருக்கிறது. அது உண்மைதானா, அது உண்மையென்றால் காரணம் என்ன என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.
''உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள், தங்கள் டயட்டில் அரிசிக்குப்பதிலாக காலிஃப்ளவரை அவித்து சாப்பிடுகிறார்கள். 100 கிராம் காலிஃப்ளவரில் மொத்தமே 25 கலோரிதான் இருக்கிறது. 3 கிராம் கொழுப்பு, 5 கிராம் மாவுச்சத்து, 1.9 கிராம் புரதம் என்று இருப்பதால், வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் ஏற்றது, நீரிழிவு இருப்பவர்களுக்கும் ஏற்றது. இதில் வைட்டமின் சி, கே, பி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீஷியம், ஃபோலேட்டின், கோலின் என்று எக்க்கச்சக்க சத்துக்கள் இருக்கின்றன.
சுற்றுச்சுழலில் இருக்கிற மாசுபாடும், உணவுப்பொருள்களில் இருக்கிற பூச்சிக்கொல்லி மருந்தும் நம் உடலில் ஆக்சிடேஷனை அதிகரிக்கும். ஆக்சிஜனைக் குறிக்கும் O 2-வில் ஒரு எலெக்ட்ரான் சேர்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுக்கிறார்கள். இதனால், உடலில் திசுக்களில் மாற்றம் நிகழும். இதை காலிஃப்ளவர் குறைக்கும்.
மூச்சுக்குழல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
இதில் இருக்கிற வைட்டமின் கே ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்யும்.
காலிஃப்ளவரில் இருக்கிற என்சைம், கேன்சரை வராமல் தடுக்கும். வருகிற வாய்ப்பு இருப்பவர்களுக்கு அதை தள்ளிப்போடும்.
வயிற்றில் அல்சரை ஏற்படுத்தும் ஹெலிகோபாக்டர் பைலோரி (எச்.பைலோரி) என்கிற பாக்டீரியாவின் வளர்ச்சியைக் குறைக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும்.
வயது காரணமாக ஏற்படுகிற எலும்பு அடர்த்தி இழப்பை தடுக்கும். எலும்புகளில் கொலாஜின் சேர உதவுவதால், மூட்டுவலி வராது.
காலிஃப்ளவர் ரைஸ் உடல் எடையைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் என்றாலும், இதிலிருக்கிற அதிகப்படியான நார்ச்சத்து சிலருக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும்.
காலிஃப்ளவர் மூளையில் வீக்கம் வராமல் தடுப்பதால், வயது காரணமாக வருகிற அல்சைமர், பார்க்கின்சன் போன்ற பிரச்னைகளைத் தள்ளிப்போடும்.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
யார் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது?
இதயப் பிரச்னைக்கான `பிளட் தின்னர்' மாத்திரை சாப்பிடுபவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது. தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்கள் அளவோடு சாப்பிடலாம்.
காலிஃப்ளவர் ரைஸ் பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?
காலிஃப்ளவர் ரைஸ் உடல் எடையைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் என்றாலும், இதிலிருக்கிற அதிகப்படியான நார்ச்சத்து சிலருக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும்.
உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருப்பவர்கள் காலிஃப்ளவரை சாப்பிட்டால், இதில் இருக்கிற பியூரின் அதை இன்னும் அதிகப்படுத்திவிடலாம். இதனால், சிறுநீரகக்கல் மற்றும் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் கவுட் ஆர்த்ரைட்டீஸ் போன்ற பிரச்னைகள் வரலாம்'' என்கிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.
Comments
Post a Comment