Skip to main content

Health: மழை & குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

பழக்கம் காரணமாக், குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பார்கள் சிலர். அப்படி செய்யலாமா என நரம்பியல் மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

``மனிதர்கள் `warm-blooded animal' வகையைச் சேர்ந்தவர்கள். நம்முடைய உடலின் வெப்பநிலையை நம் தோலிலிருக்கிற ரத்த ஓட்டம்தான் சீராக வைத்திருக்க உதவுகிறது. திடீரென அதிகப்படியான குளிர்ச்சி நம்முடைய தோலைத் தாக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் ரத்தம் இதயத்துக்குள் வரும். இதயம் அந்த ரத்தத்தை பம்ப் செய்து மூளைக்கு அனுப்பும். மூளைக்கு அதிகப்படியான ரத்தம் செல்லும்போது மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக்கசிவு மூளையின் உட்புறமும் ஏற்படலாம், வெளிப்புறமும் ஏற்படலாம். உள்ளுக்குள் ஏற்படும்போது பக்கவாதம் வரலாம். திடீரென மயக்கமும் ஏற்படலாம். மயக்கத்துக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி விடலாம் என்றாலும் முப்பத்து மூன்று சதவிகிதம் உயிராபத்தும் இருக்கிறது.

குளியல்

இத்தனை டிகிரிக்கு மேல் ஓ.கே!

குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. நாம் குளிக்கும் நீர் 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல்தான் இருக்க வேண்டும். 25 டிகிரி வெப்பத்தை எப்படித் தெரிந்துகொள்வது? நம் வீடுகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைத்துக் குடிக்கும் நீர் 30 டிகிரி வெப்பத்தில் இருக்கும். இதுவே மண்பானையில் என்றால் 27 அல்லது 28 டிகிரியில் இருக்கலாம். குளிக்கும் நீரில், நம் கையை வைத்துப் பார்த்தாலே `குடிக்கும் நீரையொத்த வெப்பம் இருக்கிறதா' என்பதை உணர முடியும்.

அதிகப்படியான குளிர்ச்சி ஆபத்தே..!

இரவு நேரங்களில் வெளிப்புற வெப்பநிலை 24 அல்லது 23 டிகிரி வரை குறையும். குளிர்காலத்தில் இது இன்னமும் குறையும். இரவிலும் குளிர்காலத்திலும் தண்ணீர் மிகவும் சில்லென்று இருக்கும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகக்கூடக் குளிர்ந்த நீரை முதலில் தலையில் ஊற்றக் கூடாது.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன்

குளிர் காலத்தில் ஆற்று நீரில் தலைகீழாக டைவ் அடிக்கலாமா?

குளிர் காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் ஆற்றுநீரில் தலைகீழாகக் குதிப்பது நல்லதல்ல. உடம்பின் வெப்பநிலை திடீரென குறையும்போது நான் ஏற்கெனவே சொன்னதுபோல மூளைக்கு அதிக ரத்தம் சென்று பிரச்னை வரலாம். வீட்டில் குளித்தாலும் சரி, நீர் நிலைகளில் குளித்தாலும் சரி, முதலில் பாதங்களில், அடுத்து முட்டிகளில், பிறகு இடுப்பில், நெஞ்சில், கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் பட வேண்டும். இதுதான் சரியான குளியல் முறை.

ஷவரில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வருமா?

மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுகிற அளவுக்கு, ஷவரில் நீர் வேகமாக வருவதில்லை. மற்றபடி, ஷவரில் வருகிற நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அதைத் தவிர்ப்பதே நல்லது.

குளியல்

நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வராதா?

வேகமான நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போதுகூட மூளை நரம்புகளில் சேதம் ஏற்படலாம். அதனால்தான், நீர்வீழ்ச்சி வேகமாக இருக்கும்போது பொதுமக்களைக் குளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நீர்வீழ்ச்சியின் வேகம் மூளை நரம்புகளை மட்டுமல்ல கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.

இந்த அறிவுறுத்தல்கள் குழந்தைகளில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை பொருந்தும்'' என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...