ஆரோக்கியமற்ற பழக்கவழக்கத்தினாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கட்டாயத்தினாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்கள் போன்ற தொற்று இல்லாத நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் இந்தியாவில் 70 சதவீதமான மரணங்களுக்கு இதுவே மூல காரணமாக அமைகிறது. புள்ளிவிவரத்தின் படி பத்தில் ஒரு இந்தியர் இந்த தொற்று இல்லாத நோயால் அதாவது Non- Communicable diseases ஆல் பாதிக்கப்படுபவர் என்றும், 25-55 வயது உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிகிறது. இது தொடர்ந்தால் 2030ல் உலகம் 30 ட்ரில்லியன் டாலர் இறப்பையும் 36 மில்லியன் மக்கள் இந்த Non- Communicable diseases- இல் இறப்பார்கள் என்றும், இதற்கான தீர்வை மிகவும் விரைவாக எடுக்க வேண்டும் என்றும் World Economic Forum எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் நமக்கு நல்ல செய்தியாக அமைவது இதுபோன்ற நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிறந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் நோய்களை முற்றிலும் குணமாக்க வாய்ப்புள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்தத் தொற்று இல்லாத நோய்களின் காரணம் தனிநபரின் வாழ்க்கை முறையை, பழக்கவழக்கங்...