Skip to main content

``மதிமுக-வை நடத்துவது வீண் வேலை; கட்சியிலிருந்து விலகுகிறேன்!" - வைகோவுக்கு சு.துரைசாமி கடிதம்

ம.தி.மு.க-வில் வைகோவின் மகன் துரை வைகோவின் நியமனத்துக்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி, தற்போது ம.தி.மு.க-விலிருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறார். இது தொடர்பாக திருப்பூரில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ம.தி.மு.க-வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை. ஆனால் பெரியாரும், அண்ணாவும் எந்த லட்சியத்துக்காகப் பாடுபாட்டார்களோ, அந்த லட்சியத்துக்காக இனி என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவேன். சு.துரைசாமி கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் ம.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டுதான், தி.மு.க-வில் இணைந்து உதயசூரியன் சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே தி.மு.க-வில் இணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். ம.தி.மு.க இனி தனிக்கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இனியும் ம.தி.மு.க-வை நடத்துவது வீண் வேலை. இளைஞர்களின் ஆற்றலை விரயமாக்க வேண்டாம். வைகோ சொல்வதை நான் பலமுறை எதிர்த்திருக்கிறேன். பேசுவது என்றாலும், விமர்சிப்பது என்றாலும் அவர் எல்லை தாண்டுவார். ஒருமுறை தன்னுடைய தவற்றை உணர்ந்து வைகோ என்னிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. கோயமுத்தூர் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக சீனிவாசனும் இருக்கிறோம். தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு. ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம். 1967-ம் ஆண்டு தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, கோவையில் தொழிற்சங்க கட்டடத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ம.தி.மு.க-வுக்கும், நாங்கள் நடத்திவரும் தொழிற்சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நான் தொடர்வேன்.வைகோ - திருப்பூர் துரைசாமி கொரோனா காலகட்டத்துக்குப் பிறகுதான் துரை வைகோ கட்சிக்குள் வந்தார். ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யா இருக்கிறார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக வைகோ செல்ல முடியாத இடங்களுக்கும், பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குத்தான் பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கட்சிக்குப் பாடுபட்டவர்களை ஒதுக்கும் நிலைதான் இன்றைக்கு ம.தி.மு.க-வில் நிலவுகிறது” என்றார்.Loading…
http://dlvr.it/SpvWd1

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...