மாதவிடாய் சுகாதார தினம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாதவிடாய் குறித்த சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
28 நாள்களுக்கு ஒருமுறை தான் மாதவிடாய் வர வேண்டும் என்பது கட்டாயமல்ல. 21 முதல் 35 நாள்கள்வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இது ஆரோக்கியமானதே.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சிலருக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.
ஹார்மோன் பிரச்னைகளுக்கான தீர்வை, வாழ்வியல் முறை மாற்றங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் ரத்தம் கட்டியாக வெளியேறுவது, அளவுக்கதிகமாக வெளியேறுவது, ரத்தம் அடர் நிறத்தில் இருப்பது போன்றவை யாவும் பிரச்னைகளுக்கான அறிகுறிகள். இவற்றை உதாசீனப்படுத்த வேண்டாம்.
அளவுக்கதிகமான ரத்தப்போக்கு என்பது ஒரே நாளில் ஆறுக்கும் மேற்பட்ட முறை நாப்கினை மாற்ற வேண்டிய சூழல்.
கருவுற நினைக்கும் பெண்கள், மாதவிடாயின் 7-ம் நாள் தொடங்கி 14-ம் நாள் வரையிலான (Ovulation Phase) நாள்களில் உறவுகொள்ள அறிவுறுத்தப்படுவர்.
ஓவ்யூலேஷன் ஃபேஸ் நாள் கணக்கு, ஒருவரின் உடல் அமைப்பு, அவர் எதிர்கொள்ளும் மனஅழுத்தம், அவருடைய உணவு முறை, உடற்பயிற்சி முறைகள், அன்றாட தூக்க வரைமுறை அனைத்தையும் பொறுத்தே அமையும். எனவே அனைவருக்கும் ஒரேபோல் இருக்காது.
Comments
Post a Comment