Skip to main content

தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட `அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ்'!

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கத்தினாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கட்டாயத்தினாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்கள் போன்ற தொற்று இல்லாத நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இதனால் இந்தியாவில் 70 சதவீதமான மரணங்களுக்கு இதுவே மூல காரணமாக அமைகிறது. புள்ளிவிவரத்தின் படி பத்தில் ஒரு இந்தியர் இந்த தொற்று இல்லாத நோயால் அதாவது Non- Communicable diseases ஆல் பாதிக்கப்படுபவர் என்றும், 25-55 வயது  உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிகிறது. இது தொடர்ந்தால் 2030ல் உலகம் 30 ட்ரில்லியன் டாலர் இறப்பையும் 36 மில்லியன் மக்கள் இந்த Non- Communicable diseases- இல் இறப்பார்கள் என்றும், இதற்கான தீர்வை மிகவும் விரைவாக எடுக்க வேண்டும் என்றும் World Economic Forum  எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் நமக்கு நல்ல செய்தியாக அமைவது இதுபோன்ற நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்து  அதற்கான சிறந்த சிகிச்சையை எடுப்பதன் மூலம் நோய்களை முற்றிலும் குணமாக்க வாய்ப்புள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்தத் தொற்று இல்லாத நோய்களின் காரணம் தனிநபரின் வாழ்க்கை முறையை, பழக்கவழக்கங்கள், உடல் அமைப்பு சார்ந்து இருப்பதால், சிகிச்சை முறையும் தனி நபருக்கு ஏற்றார் போல் (Personalized Plan) வடிவமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, செயல் துணைத் தலைவர் அப்போலோ குழுமங்கள் கூறுகையில், 40 வருடங்களுக்கு முன்பே அப்போலோ மருத்துவமனை, இந்தியாவில் ஹெல்த் செக்கப் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக் திட்டங்களை அறிமுகம் செய்து முன்னோடியாக திகழ்கிறது. 20 மில்லியன் ஹெல்த் செக் செய்து சாதனை படைத்த நிலையில் அப்பல்லோ ஹாஸ்பிடல் தனி மனிதனின் வாழ்வாரத்தை முன்னேற்றுகிறது என்றும் இந்த Apollo Health Check on Wheels, தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தங்கள் உடல் நலனை சீராக வைத்துக் கொள்வதற்கும் நோய்களை முன்பே கண்டறிந்து சிறந்த சிகிச்சையை விரைவாக மேற்கொள்வதற்கும், எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை கண்டறிய பெரிதும் உதவியாக திகழ்கிறது என்று கூறினார்.”

திரு நீலக்கண்ணன், மதுரை மண்டல முதன்மை நிர்வாக இயக்குனர் கூறுகையில், ப்ரோ ஹெல்த் ப்ரோக்ராம் (Prohealth Program) தனி நபருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனி நபரின் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களுக்கு முன் அறிவிப்பாக அமைவது மட்டுமில்லாமல் அதற்கு துல்லியமான பரிசோதனைகளும், மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைக்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது என்று கூறினார்.”

டாக்டர் பிரவீன் ராஜன், JDMS கூறுகையில்,“Apollo Health Check on Wheels, ஒரு நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம் என்றும் தங்கள் உடலை தங்களிடத்திலே பரிசோதித்துக்கொள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோமெட்ரி, ECHO, ஈசிஜி, பிஎஃப்டி, ஈஎன்டி செக் அப், கண் பரிசோதனை, அடிப்படை பரிசோதனையான (உயரம், எடை, பிபி, நாடித்துடிப்பு), இரத்த மாதிரி சேகரிப்பு போன்ற முழு உடல் பரிசோதனைகள் செய்ய தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளது என்று கூறினார்.”

மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலின் மகாகும்பாபிஷேகம் 25 மே 2023 அன்று நடைபெற்றது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் மஹோத்ஸவ விழாவைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது. 25 மே 2023 அன்று நடந்த மகாகும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மதுரைக்கு வருகை தந்து, “Apollo Health Check on Wheels” பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஆன்சைட் ஹெல்த் செக் நடத்த, மதுரை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் “Apollo Health Check on Wheels” பேருந்து செல்லும். இந்த செய்தியாளர் சந்திப்பில் மூத்த மருத்துவ சேவைகள், அப்போலோ குழுமங்கள், டாக்டர் ரோகினி ஸ்ரீதர், மார்க்கெட்டிங் மண்டல ஜி.எம் - மணிகண்டன்.கே, அப்போலோ மதுரை - யூனிட் ஹெட், டாக்டர் நிகில் திவாரி, ஜி.எம் ஆபரேஷன்ஸ் திருமதி மற்றும் என்.கற்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...