Skip to main content

கர்ப்பிணிகளுக்கு மிளகு, மஞ்சள் பால் அவசியமா... மருத்துவர்கள் சொல்வதென்ன?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கர்ப்பம்

புரதச்சத்து, மாவுச்சத்து, தேவையான அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் என சமச்சீரான உணவியல் முறையினைப் பின்பற்ற வேண்டும். இது, உடலில் உள்ள உபாதைகளைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றில் உள்ள சிசுவிற்கு ஊட்டத்தையும் அளிக்கும்.

ஆனால் உடல் சூட்டினை சீராக வைத்துக் கொள்ள, மிளகு -மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது கட்டாயம் என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகவே மஞ்சளினால் கிடைக்கும் நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மனிதர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பொருள் மஞ்சள்தூள். மஞ்சள்தூள் இல்லாமல் உணவு சமைக்க முடியாது. குறிப்பாக குழம்பு, கிரேவிகளில் சுவைக்கும் நிறத்துக்கும் காரணம் மஞ்சள்தூள் தான்.

கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் தூள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. மஞ்சளில் உள்ள Curcumin என்னும் பொருள்,வீக்கம் தடுக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் இருக்கிறது. அதேபோல் மிளகிலும் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன. உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ள மஞ்சளையும், மிளகையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் மிளகு- மஞ்சள் பால் செய்யும் பக்குவம் பற்றியும், அதனை பருகுவதன் விதிமுறை பற்றியும் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது...

``ஷீர கஷாயம் என்று சொல்லப்படும் இந்த மிளகு -மஞ்சள் பாலினை தயாரிப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதாவது 1:8:32 என்ற அளவு கணக்கில் செய்ய வேண்டும். அதாவது, ஒருமடங்கு மிளகு மற்றும் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டால் 8 மடங்கு பால் 12 மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையினை கொதிக்க வைத்து, பாலின் அளவுக்கு சுண்டக் காய வைக்க வேண்டும். இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், இதனை அனைத்து கர்ப்பிணிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூற இயலாது. சிலருடைய உடலின் தன்மைக்கேற்ப இது மாறுபடும். எனவே மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப இதனைப் பருகுதவதே நன்மை தரும்" என்றார்.

மல்லிகா, சித்த மருத்துவர்

இந்த மிளகு- மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது அவசியமா என்பது பற்றி, சித்த மருத்துவர் மல்லிகாவிடம் கேட்டோம்... அவர் ``மிளகு- மஞ்சள் பாலினை கர்ப்பிணிகள் தினமும் பருக வேண்டிய தேவை இல்லை. பொதுவாகவே பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு தூளைச் சிறிதளவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும். ஏனெனில், மஞ்சள் மற்றும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும் சிலருடைய உடலின் வாகிற்கேற்ப மாறுபடும். அதனால், தினமும் பருகக்கூடாது. வாரத்திற்கு இரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளுமபோது சளி, இருமல் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்" என்றார்.

- சொர்ண மீனா ராமநாதன்


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...