Doctor Vikatan: இந்தியன் டாய்லெட் உபயோகம்தான் சிறந்தது என்று சிலரும், வெஸ்டர்ன் டாய்லெட்தான் சிறந்தது என வேறு சிலரும் காலங்காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெரும்பாலான வீடுகளில் இந்தியன் டாய்லெட்டை வெஸ்டர்னாக மாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். உண்மையில், இந்த இரண்டில் எது சிறந்தது... யார், எதை உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் தினமும் காலையில் எழுந்ததும் முழுமையாக மலம் கழித்துவிட்டாலே, ஒருவித நிம்மதியான உணர்வு ஏற்படும் பலருக்கும். மலம் கழிப்பதற்காகவே, டீ குடிப்பதாகவும் புகை பிடிப்பதாகவும் சொல்கிற பலரைப் பார்க்கலாம். சிரமமின்றி மலம் கழிக்க வெஸ்டர்ன் டாய்லெட்டை விடவும் இந்தியன் டாய்லெட்டே சிறந்தது. இந்தியன் டாய்லெட் உபயோகிக்கும்போது குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் மலம் கழிக்க வேண்டும். இது பல வகைகளில் சாதகமானதும்கூட. நம் உடலில் மலம் சேரும் மலக்குடலை, ஆசன சுருக்குத் தசை என்கிற மூடிதான்...