Skip to main content

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் பொறுத்து குளிர் உணர்வு மாறுபடுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

குளிர்ச்சியைத் தாங்கும் திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மிக முக்கியமாக இது ஒருவரது 'பாடி காம்பேசிஷன்' (Body Composition) எனப்படும்  உடலில் உள்ள கொழுப்பு, தசை, எலும்பு மற்றும் நீரின் விகிதத்தைப் பொறுத்தது. அதாவது அவரது உடலில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு தசை அடர்த்தி உள்ளது, அவர்களது வளர்சிதை மாற்றம் எப்படியிருக்கிறது போன்றவற்றைப் பொறுத்தது.

உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு அது ஒருவகையிலான காப்பு (insulation) போன்று செயல்படும். அதன் விளைவாக அவர்கள் எவ்வளவு குளிரான இடத்தில் இருந்தாலும் அதை சிரமமாக உணர மாட்டார்கள். AC செய்யப்பட்ட அறையில்கூட அவர்களில் சிலருக்கு வியர்க்கும். அதேபோல தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவை தவிர, உடல் அளவில் மிகுந்த ஆக்டிவ்வாக இருப்பவர்கள், அதிகம் நடப்பவர்கள், ஏதேனும் வேலையைச் செய்துகொண்டே இருப்பவர்கள் எல்லோரும் உடலளவில் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்வார்கள். அதனாலும் அவர்களுக்கு அதிகம் குளிர் எடுக்காது.

நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும் இதில் பங்கிருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் அதிக காபி குடிப்பவராக இருந்தால், அது பி.எம்.ஆர் எனப்படும் 'பேசல் மெட்டபாலிக் ரேட்'டை அதிகரிக்கும். அதனால் உடலளவில் கதகதப்பாக உணர்வீர்கள்.

தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும்.

குளிரைத் தாங்கும் தன்மைக்கும் தைராய்டு பாதிப்புக்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும்போது அதிக குளிர்ச்சியாகவும், தைராய்டு சுரப்பு அதிகமாக இருக்கும்போது சூடாகவும் உணர்வார்கள். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு, குளிரைத் தாங்கும் திறன் குறைவாக இருக்கும். குளிர்ச்சியான வானிலை நிலவும்போது சிலருக்கு மூட்டு தொடர்பான ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ், ஃபைப்ரோமையால்ஜியா போன்ற  பிரச்னைகள் தூண்டபப்டும். வலி அதிகரிக்கும். 

உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு, ரத்த நாளங்கள் சுருங்குவதால்  உடலில் குளிரைத் தாங்கும் திறன் சற்று அதிகமிருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, இத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு, எந்தக் காரணத்தால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என தெரிந்த பிறகே அதற்கான தீர்வைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...