Skip to main content

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் ஆபத்து தெரியாமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுகிறார்கள். ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவமாகத்தான் சிறுமியின் மரணச் செய்தியைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருள்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழக்கமும் இந்த வகைதான்.

அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி,  உணவுப்பொருள்தானே... அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம்.  ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.  குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண் போன்றவற்றைச் சாப்பிடுவதால், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகரிக்கும். ரத்தச்சோகை அளவுக்கு அதிகமாகும்போது அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறலாம்.  அரிசியை பச்சையாகச் சாப்பிடுவதால், ஃபுட் பாய்சன் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம்.  குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமி, அரிசியை ஊறவைத்துச் சாப்பிடும் வழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அப்படி ஊறவைப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட்டு, ஃபுட் பாய்சன் ஆகலாம். 

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம்.

சமைக்காத அரிசியில் பசிலஸ் சீரியஸ்  (Bacillus cereus )  எனப்படும் கிருமி இருக்கும். அதுதான் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமி. இதன் வீரியத்தைப் பொறுத்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.  சமைக்காத அரிசி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்போதும் களைப்பு, தூக்கம், முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, இந்தப் பழக்கத்தை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது.

எனவே, நீங்களும் சரி, உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தாலும் சரி, அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, இதிலிருந்து வெளியே வர அறிவுறுத்துங்கள். ஏதேனும் சத்துக்குறைபாடு இருக்குமானால், அதற்கான சிகிச்சை கொடுத்தாலே, இப்படிப்பட்ட வித்தியாசமான உணவுத் தேடலிலிருந்து வெளியே வரலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...