Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்... அது உடலில் உப்பு சேர்வதன் அடையாளமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படுவதா... கால் வீக்கத்துக்கு சிகிச்சைகள் எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் என்பது இயல்பான விஷயம்தான். கருவிலுள்ள குழந்தைக்கு ஆரம்ப நாள்களில் தாயிடமிருந்துதான் ரத்த ஓட்டம் செல்ல வேண்டியிருக்கும். அதனால் ரத்தத்தின் அளவு அதிகமாகும். ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பதன் விளைவாக, கர்ப்பிணிகளுக்கு உடலில், குறிப்பாக கால்களில் அதிக அளவில் நீர் கோத்துக்கொள்ளும். அதனால் கால்களில் வீக்கம் ஏற்படுவதும் இயல்பாகவே நடக்கும். கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் உள்ள பெண்கள், கால்களில் வலி இல்லாதவரை அது குறித்து பயப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் 12-வது அல்லது 13-வது வாரங்களில் கால்கள் வீங்க ஆரம்பிக்கும். 28 வாரங்...