Skip to main content

அதென்ன நவபாஷாணம்; அது கொடிய வியாதிகளையும் சரி செய்யுமா? - சித்த மருத்துவர் விளக்கம்

குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நவபாஷாண தண்டாயுதபாணி கோயிலில், நவபாஷாணத்தாலான முருகன் சிலை இருக்கிறது. இந்த சிலை சுரண்டப்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

பழனிமலைக் கோயில், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறைக்கோயில் என தமிழ்நாட்டில் சில இடங்களில் நவபாஷாண சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக, சுரண்டப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. இன்றைக்கும் இதேபோன்றதொரு செய்தி வந்திருக்கிறது. நவபாஷாண சிலைகள் என்றால் என்ன, அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா என்று சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்றிந்தோம்.

சித்த மருந்து

''நவபாஷாணங்கள் என்பதற்கு கல், மருந்து, நஞ்சு என்று மூன்று அர்த்தங்கள் உண்டு. நவபாஷாணம் அல்லது நவபாடாணம் என்றும் சொல்லலாம். இது மிக மிக குறைவான அளவு மனித உடலுக்குள் சென்றாலும், மரணம் நிகழ்ந்துவிடும். சித்தர்களுடைய நூல்கள் பாஷாணங்களில் 64 வகைகள் இருக்கின்றதாக சொல்கின்றன. இதில் இயற்கையாக கிடைக்கக்கூடியவை 32, செயற்கையாக உருவாக்கக்கூடியவை 32. இவற்றில் லிங்கம், வீரம், பூரம், கந்தகம், கெளரி பாஷாணம், தாளகம், மனோசிலை, வெள்ளைப் பாஷாணம், தொட்டிப்பாஷாணம் ஆகிய 9 வகை பாஷாணங்கள் மிகக்கொடிய விஷத்தன்மையைக் கொண்டவை. அதே அளவுக்கு இந்தப் பாஷாணங்களில் மருத்துவத்தன்மைகளும் இருப்பதாகச் சித்தர்கள் ஆராய்ந்து தெரிந்துகொண்டதோடு, அவற்றை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தியிருப்பதை சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நவபாஷாணங்களைத்தான் சிலை செய்யப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை தீர்க்கமுடியாத சில வியாதிகள் வராமல் தடுக்கும் என்பதையும் சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

நவபாஷாணங்களில் இருக்கிற மருத்துவ குணங்களை அறிந்துகொண்ட சித்தர்கள், அவற்றில் ஏன் சிலைகளை வடித்தார்கள் என்கிற கேள்வி நமக்கெல்லாம் எழும். அதற்கும் பதில் இருக்கிறது. சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம், அவற்றை அனுபானங்களுடன் சேர்த்துதான் அருந்த வேண்டும் என்பது. அதென்ன அனுபானங்கள்...? பால், தேன், நெய், பழச்சாறுகள்தான் அந்த அனுபானங்கள். சித்த மருந்துகளின் தன்மைகளுக்கு ஏற்ப, அவற்றை பால், தேன் அல்லது நெய் என ஏதோவொரு அனுபானத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே, அதன் பலன் நோயாளிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது நவபாஷாண சிலைகளுக்கு வருவோம். நவபாஷாணத்தில் இருக்கிற மருத்துவ தன்மை, அதன் மீது சேர்க்கப்படுகிற அனுபானங்கள் என இங்கேயும் அதே கான்செப்ட் தான் நடக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படாததால், இதைத்தாண்டிய தகவல்களை தெரிவிக்க முடியவில்லை.

செல்வ சண்முகம்

நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களான பால், தேன், நெய் போன்றவற்றை சாப்பிட்டால், தீராத வியாதிகளும் சரியாகி விடுமா என்கிற கேள்வி இந்த இடத்தில் பலருக்கும் எழும். காப்பு, நீக்கம், நிறைப்பு என சித்த மருத்துவத்தில் 3 வகை மருந்துகள் இருக்கின்றன. காப்பு என்பது வருமுன் காப்பது, நீக்கம் என்றால் நோயை முழுமையாக நீக்குவது, நிறைப்பு என்றால் தாக்கிய நோய் சரியான பின்பு உடம்பின் கட்டமைப்பை பழையபடி மீட்டுருவாக்கம் செய்வதற்காக செய்யப்படுகிற சிகிச்சை. இதில் நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களை அருந்துவது என்பது நோய் வராமல் தடுக்கிற 'காப்பு' மருத்துவ முறையைச் சேர்ந்தது'' என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...