Skip to main content

ஒழுங்கமைக்கப்படாத சூழலால் உண்டாகும் மன அழுத்த பிரச்னை - தவிர்ப்பதற்கு தீர்வு சொல்லும் உளவியலாளர்!

அமெரிக்காவில் இருக்கக்கூடிய `அலையன்ஸ் மனநல மேம்பாட்டு அமைப்பானது' ஒரு லாபம் நோக்கம் இல்லாத பொதுச் சேவை செய்யக்கூடிய ஓர் அமைப்பாகும். இது அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் மனநலத்தையும், உடல் நலத்தையும் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே வெறி வெல் மைண்ட் (very well mind) அதாவது ஒரு சிறந்த மனநிலையை உருவாக்குவதே!

இவர்கள் ஜனவரி மாதத்தை ஒழுங்கமைக்கப்பட்ட மாதமாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். மேலும் உளவியல் ரீதியிலான பார்வையின் அடிப்படையில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறைவாக இருப்பதும், ஒருவரின் இலக்குகளை அடைவதற்கு ஒழுங்குமுறைகள் பெரிதும் உதவுவதும் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீடுகளைப் பார்க்கும்போது அதிக மன அழுத்தம் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய உளவியலாளர் சு.சுபாராமன், ``ஒழுங்கமைக்கப்படுதல் என்பது ஆரோக்கிய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவையில்லாத பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதால் நம் மனம் நிம்மதி அடையும், எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறையும் மற்றும் கவனத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும். வெரி வெல் மைண்ட் என்ற திட்டத்தின் படி தேவையற்ற பொருள்களைக் குறைத்தல், சுத்தம் செய்தல், மனநலம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உள்ளது.

ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கக்கூடிய நம்முடைய சூழல் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் நம்முடைய மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசால்(cortisol) அதிகமாகச் சுரப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானவர்கள் நமக்கு மட்டும் தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீட்டைப் பார்க்கும் பொழுது மன அழுத்தமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். இல்லை, நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான மனநிலை வருவது உண்டு.

சமீபத்தில் ஒரு தம்பதி (கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர்கள்) உளவியல் ஆலோசனை பெற வந்திருந்தனர்.

இருவருக்கும் வீட்டு வேலைகளை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் தன் வீட்டுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக வேண்டுமென்றே தாமதமாக வீட்டிற்கு வருவதாக... தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதிலும் அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொள்வது, குழந்தைகளையும் மனதளவில் பாதிப்படையச் செய்திருக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தைகளை மாணவ விடுதியில் சேர்க்கும் அளவுக்கு யோசித்து, ஆலோசனை கேட்டு வந்திருந்தனர். இதுபோல எத்தனையோ உறவுச் சிக்கல்கள் ஒழுங்கமைப்பின் சீர்குலைவினால் ஏற்படுகிறது.

ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாழ சில சில வழிமுறைகள் இருக்கின்றன:-

1. காலையில் எழுந்தவுடன் நாம் இன்று செய்ய வேண்டிய வேலை குறித்து to do list போடுவது மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து (visualization) காட்சிப்படுத்திப் பார்த்தல்.

2. அனைத்து வேலைகளையும் ஒன்றாக முடிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஏனென்றால் எப்பேர்பட்ட திட்டம் என்றாலும் 100/100 செய்து முடிப்பது சாத்தியக்குறைவு தான். ஆகவே வேலையை பிரித்துக் கொண்டு ஒரு பாக வேலைகளில் கவனம் செலுத்தி, அதனை முடித்திவிட்டு பிறகு அடுத்த வேலைக்குச் செல்லுங்கள்.

சு.சுபாராமன் - உளவியலாளர்


3. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதை ஒரு கலையாக நினைத்துப் பின்பற்றலாம்.

4. நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களைத் தேவையுடையவர்களுக்குக் கொடுத்து விடுவது இட நெருக்கடியைச் சரிசெய்யும்.

5. ஒழுங்குபடுத்தும் வேலையை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்குச் சிரமமாக இருந்தால் ஏதாவது பாட்கேஸ்ட், ரேடியோ போன்றவற்றைக் கேட்டுக்கொண்டே அதைச் செய்யுங்கள்.

இதையெல்லாம் பின்பற்றி நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒருங்கமைப்பு சிக்கல்களிலிருந்து தீர்வு காணலாம்" என்கிறார் சுபாராமன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...