Skip to main content

திருப்பத்தூர்: குப்பை கூளங்கள் - கழிவு நீர் - துர்நாற்றம்... சுகாதாரத்தை காக்குமா நகராட்சி?

சுகாதார சீர்கேடு

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை 3-வது வார்டில் 350க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கழிவுநீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி மிகவும் அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது.

இவ்விடத்தில் வீட்டிலிருந்து வரும் கழிவுகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், உணவகங்கள், பல்வேறு இடத்திலிருந்து வரும் கழிவுகள் இந்த கால்வாயில் கலக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள், சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவர்கள் பெறும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரித்த போது, "இந்த இடம் கடந்த சில மாதங்களாகவே இப்படி தான் உள்ளது. இரவு நேரங்களில் சிலர் இவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலரும் இந்த இடத்தில் குப்பைகளை வீசி செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சாலையின் அருகிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

மறுபுறம் இருக்கும் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் அதே இடத்திலேயே நெருப்பு மூட்டி எரிக்க விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு அந்த பகுதியில் புகை மூட்டம் உருவாவதால் சாலையைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது." என்றனர்.

அடிக்கடி வரும் மர்மக் காய்ச்சல்... மக்கள் அவதி!

மேலும், இப்பகுதில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "இந்த பிரச்னையை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை தூய்மை பணியாளர்களும் இந்த இடத்தை பார்வையிடாமல் கண்டும் காணாமல் உள்ளார்கள். இந்த விவகாரம் குறித்துப் பல முறை‌ அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பைகளை எடுத்து அதன் அருகிலேயே அகற்றிச் சென்று விடுகின்றனர். இரண்டு நாள்களுக்குள் மீண்டும் அதே நிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும் நோய்த் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது அடிக்கடி குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் வந்து உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது." என்றனர்.

ஆசிரியர் நகர்: கால்வாய் வசதி இல்லை...

ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் இதைப் பற்றிக் கூறுகையில், "ஆசிரியர் நகரில் வசிக்கும் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், வெளியேறும் கழிவுகள் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு சிறிய இடத்தில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் கழிவுகளும் இங்கு தான் கலக்கிறது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது அப்படியே சேர்ந்து நிற்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக குப்பைகளும் பெரிதளவு சேர்ந்திருந்தது. அப்போதைய நகராட்சி நிர்வாகம் இயந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை அகற்றினார்கள்.

இந்த இடத்தின் அருகாமையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் இங்கு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் வேலை முடிந்ததும் குப்பைகளை இங்க வீசி செல்கிறார்கள்.

இதன் அருகே சிறிது தொலைவில் பேருந்து நிறுத்தமும், தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது. கொசுக்கள் பெருமளவில் உருவாகுவதால் இரவு நேரங்களில் உறங்குவதற்கு சிரமாக உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் அடிக்கடி காய்ச்சலும் வருகிறது. மாதத்தில் மூன்று முறையாவது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை இப்படியே நீடித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

கால்வாய் அமைத்துக் கழிவுநீர் செல்ல வழிவகை செய்திருந்தால் இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டிருக்காது. கழிவுநீர் செல்ல வழிவகை செய்வதோடு நிற்காமல், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில்..

மேலும் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தையொட்டி (BDO Office) இருக்கும் கால்வாயிலும் இதே போன்ற சூழல் நிலவிக் காணப்படுகிறது. குப்பைகள் குவிந்து குப்பைத் தொட்டி போல் காட்சியளிக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத பூ கடைக்காரர் ஒருவர் கூறுகையில், "இந்த இடத்தை பாருங்கள் எவ்வளவு மோசமாக உள்ளது அப்படியே வருகிறார்கள் சிறுநீர் கழித்து விட்டுச் செல்கிறார்கள் குப்பைகளையும் போடுகிறார்கள் கேட்டால் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள்.

இது இப்படியே நீடித்தால் நாங்கள் எப்படி இந்த இடத்தில் தொழில் நடத்துவது மூக்கை பிடித்த படியே வேலைச் செய்யும் அவல நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மாநிலத்தில் பல பகுதிகளில் வித்தியாசமான வியாதிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலும் இருக்கும் நிலையில், இது போன்ற சுகாதார சீர்கேட்டிற்கு‌ முற்றுப் புள்ளி வைத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. கவனிக்குமா அரசு நிர்வாகம்?!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...