Skip to main content

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship

'இட் இஸ் மை பர்சனல்' என்று சொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையே விரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது. 

சமூக ஊடகங்கள்

இணையிடம் தோன்ற ஆரம்பிக்கும் ஒளிவு, மறைவுகள் தம்பதியிடையே சந்தேகத்தை எழுப்பி உறவை உடைக்கக் காரணமாகின்றன.

காதல்

விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையே கிட்டத்தட்ட மறைந்துகொண்டிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் நல்ல விஷயம் என்று தெரிந்தவர்கள்கூட, 'அதை அவ பண்ணட்டுமே/அவன் பண்ணட்டுமே' என்றுதான் நினைக்கிறார்கள். 

Relationship

சினிமாக்களில் வேண்டுமானால் ஈகோ கொண்ட  நாயகனும் நாயகியும் முடிவில் இணைந்துவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. காதலோ, திருமணமோ... உறவை உடைக்கிற உலகின் மிகப்பெரிய சுத்தியல் ஈகோ.

Relationship

இன்றைய டெக்னாலஜி விரல் நுனியில் விஷயங்களைத் தந்துவிடுவதால், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற மனப்பான்மையைப் பெரும்பாலானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும்கூட உறவில் இணக்கத்தைத் தகர்க்கக்கூடிய விஷயம்தான்.

ரிலேஷன்ஷிப்

'நான் என்ன சொல்ல வர்றேன்னா' என்கிற நாம், 'நீ என்ன சொல்ல நினைக்கிற' என்று அட்லீஸ்ட் ஒரு காதையாவது துணைக்குக் கொடுத்தால், ரிலேஷன்ஷிப் வலுவாக இருக்கும். இல்லையென்றால், பிரச்னைதான்.

Relationship

காலை முதல் மாலை வரை அணிகிற உடையில்கூட 'செளகர்யமாக உணர்வது' அவசியம். வாழ்க்கை முழுக்க ஒரு வீட்டுக்குள் வசிப்பவர்களுக்கு, இந்த செளகர்யம் அவசியமோ அவசியம். 

Relationship

'அய்யோ... வீட்டுக்குப்போன அந்த முகத்தைப் பார்க்கணுமே' என்கிற அளவுக்குத் துணையின் மனதில் உங்கள் மீதான எரிச்சல் இல்லாதிருப்பது அவசியம். 

Relationship conflict

துணையின் விருப்பங்களை, ரசனைகளை உங்கள் விருப்பங்கள், ரசனைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டாதீர்கள். அவரவர் ரசனை அவரவர்க்கு உசத்தி.

Relationship

காதலிலும் சரி, கல்யாணத்துக்குப் பிறகும் சரி... ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்வது எந்தக் காலத்திலும் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...