பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை 'மெனு ஆங்சைட்டி' (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர். Restaurant (Representational Image) புற்றுநோயை விரட்டும் கேழ்வரகு; ரத்தசோகையைப் போக்கும் தினை... கவனம் ஈர்த்த சிறுதானிய விழா! பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த 2000 நபர்களிடம் அவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின் இறுதியில், 'Gen z' என்று அழைக்கப்படும் தற்போதைய இளம் தலைமுறையினரில் 87% பேர் இந்த மெனு ஆங்சைட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. Gen z நபர்களை ஒப்பிடும்போது, அவர்களின் முந்தைய தலைமுறையினருக்கு உணவு ஆர்டர் செய்யும்போது மனப்பதற்றம் குறைந்த அளவிலேயே ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்...