Skip to main content

Doctor Vikatan: எடையைக் குறைத்ததால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ்... நிரந்தரமாக நீக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன. அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா....? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல்  மருத்துவருமான நித்யா ரங்கநாதன்

மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்

முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன என புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால், அதன் எலாஸ்டிசிட்டி போய், தசைநார்கள் உடைவதாலேயே ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் வயிற்றுத் தசைகள் மெள்ள மெள்ள விரிவடையத் தொடங்கும். அதனால் சருமம் விரிவடைந்து எலாஸ்டிக் தன்மையை இழந்து தழும்புகள் உருவாகக் காரணமாகிறது. கர்ப்பிணிகளுக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் இப்படி சருமத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் திடீரென உடல் எடை குறைப்பவர்களுக்கும் இது சகஜம்.  திடீரென ஜிம் போய் எடையைத் தூக்கி வொர்க் அவுட் செய்வோருக்கு ஸ்ட்ரெச் மார்க் வரலாம். 

தழும்பு

ஸ்ட்ரெச் மார்க்கில் பிங்க் நிற ஸ்ட்ரெட்ச் மார்க், வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என இரண்டு உண்டு.  பிங்க் நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதால் அதறகு சிகிச்சை அளிப்பதும் சற்று சுலபமாக இருக்கும்.  வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது தசை நார்கள் உடைவதால் ஏற்படுவது. அது கிட்டத்தட்ட நிரந்தர தழும்பாகவே மாறிவிடும்.

ஸட்ரெச் மார்க்கை 100 சதகிவிதம் நீக்கிவிட முடியுமா என்றால் முடியாது. இதைத் தவிர்க்கலாமே தவிர ரிவர்ஸ் செய்ய வாய்ப்பில்லை. கர்ப்ப காலத்தில் 3-வது மாதத்தில் இருந்தே சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து அதை வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும். செராமைடு உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பது சிறந்தது. 

Weightloss

வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போருக்கும் இது முக்கியம். வெயிட் லிஃப்டிங் செய்வது, ஜிம்முக்குச் செல்வதற்கு முன்பு சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரைஸ் செய்ய வேண்டும். திடீரென எடையைக் குறைப்பது ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.  ஏற்கெனவே சொன்னது போல ஸ்ட்ரெச் மார்க்கை முழுமையாக நீக்க முடியாது. அதன் வீரியத்தை சற்று குறைக்கலாம். மருத்துவரிடம் சென்று எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, வீட்டிலேயே பின்பற்றும் சிகிச்சை என இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன.  கெமிக்கல் பீல், மைக்ரோ நீட்லிங் உள்ளிட்ட லேசர் சிகிச்சைகள் உள்ளன. 

இந்தச் சிகிச்சைகளாலும் உங்கள் தழும்புகளை 100 சதவிகிதம் ரிவர்ஸ் செய்ய முடியாது  உங்கள் உடலின் தன்மை, கொலாஜென் அளவு, ஸ்ட்ரெச் மார்க்கின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து இது தீர்மானிக்கப்படும். ஸ்ட்ரெச் மார்க் பிரச்னை உங்களை ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாக்குவதாக நினைத்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.  

கர்ப்பம்

பெரும்பாலும் பிரசவத் தழும்புகள் குறித்து பலரும் கவலை கொள்வதில்லை. அதை  பெருமையாகவே எடுத்துக் கொண்டு கடந்து போகிறார்கள் பலரும். அதையும் தாண்டி இந்தத் தழும்புகள் உங்களைத் தொந்தரவு செய்தால் சிகிச்சை எடுக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...