Skip to main content

Doctor Vikatan: பூங்காக்களின் வெளியே விற்கும் இயற்கை ஜூஸ் வகைகள்... உண்மையிலேயே ஆரோக்கியமானவையா?

Doctor Vikatan: காலையில் வாக்கிங் செல்லும்போது, பூங்காக்களின் வெளியே வாழைத்தண்டு, பாகற்காய், முள்ளங்கி, கற்றாழை என பலவிதமான ஜூஸ் விற்பதைப் பார்க்கிறோம். இவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா... யார், எந்த ஜூஸையும் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

மாத்திரைகளின் ஆதரவின்றி, தொற்றாநோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தினமும் நடைப்பயிற்சி செய்வது இனி கட்டாயம். .  மைதானங்களில், சாலையோர நடைப்பாதைகளில் உற்சாகமாக நடைபோடுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.

நடைப்பயிற்சி செய்யும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளையும் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.

கரும்பு ஜூஸ்

மனித உடலின் தன்மையோ உள் உறுப்புகளின் செயல்பாடுகள், காலச்சூழல், பணிச்சூழல், வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தத்துவ அமைப்பிற்கேற்ப மாறுபடும் என்பதால் சில விஷயங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கப உடல் தன்மை கொண்டவர்கள் குளிர், பனி நாள்களில் கற்றாழை பானங்களைப் பருகினால், கபம் அதிகரித்து கப நோய்கள் வரலாம். வெப்பம் சார்ந்த பகுதிகளில் தொடர்ந்து பணிபுரிகிறவர்களுக்கு குளிர்ச்சியான இயற்கை பொருள்கள் தேவை.

இருபத்தி நான்கு மணிநேரமும் குளிர்சூழ் அறைகளில் தொடர்ந்து பணிபுரியும் நபர்களுக்கு குளிர்காலங்களில் அவை ஏற்றுக்கொள்ளாது. கற்றாழை பானத்தை கோடைக்காலங்களில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்களையும் அதிகமாக வைத்திருக்கிறது கற்றாழை. ஆனால் குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் அதைத் தவிர்ப்பது நல்லது.

'வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு மற்றும் அறுகம்புல் சாறுகளை மட்டும் குடித்தால் போதும்… உடல் எடையைக் குறைத்துவிடலாம்…’ என்ற எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சியோடு சேர்த்து இயற்கை பானங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்வதில் தவறில்லை. குறிப்பாக வாழைத்தண்டு சாறு, கோடைக்காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கப் பேருதவி புரியும். வாழைத்தண்டு சாறு சிறுநீரக உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும். அறுகம்புல் சாற்றுக்கோ கழிவுகளை வெளியேற்றும் தன்மை இருக்கிறது. முள்ளங்கி சாறும் சிறுநீரை வெளியேற்றி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதற்காகப் பாகற்காய் சாற்றை மட்டும் குடித்தால் ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் வரும் என்ற தவறான எண்ணத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான வாழ்வியல் முறைகளையோ, உணவியல் முறைகளையோ கடைப்பிடிக்காமல் இருப்பது உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம்.

நடைப்பயிற்சி செய்யாமல், இயற்கை பானங்களைப் பருகுவதற்காக மட்டும் மைதானங்களுக்கு செல்வோர் பலர். பானங்களின் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், ஆனால் பானங்களால் மட்டுமே உடல் எடை குறையாது. உடல் உழைப்பும் முக்கியம். இன்னும் சிலர் தீவிரமாக நடைப்பயிற்சி செய்தபின்பு ஏற்படும் பசியைப் போக்க, கடைகளில் உள்ள சமோசா, போண்டா, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வதை மாலைநேர மைதானங்களில் பார்க்க முடியும். நடைப்பயிற்சியால் கிடைத்த பலன்கள் அனைத்தும் இப்படிச் சாப்பிடப்படும் எண்ணெய்ப் பலகாரங்களால் சில நிமிடங்களில் காணாமல் போகும்.

வாக்கிங்

ஆவாரம்பூ சாறு, கரும்புச்சாறு, இளநீர், பதநீர் போன்ற பானங்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது முக்கியம். நாள்பட்ட இதய நோய்களுக்காக மருந்துகளை எடுப்பவராக இருப்பின் கீரை ரகங்களை எடுக்கும்போது மருத்துவரின் ஆலோனையைப் பெறுவது நல்லது.

இயற்கை பானங்களைத் தயாரிப்பவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளைத் தான் பயன்படுத்துகின்றனரா என்பதையும் அறிந்துகொள்வது முக்கியம். உதாரணத்துக்கு ‘முடக்கறுத்தான் சூப்பில்’ முடக்கறுத்தான் தான் அங்கம் வகிக்கிறதா என்பதை உறுதிசெய்யவும். குளிர்காலங்களில் விற்பனை செய்யப்படும். முடக்கறுத்தான் சூப், முசுமுசுக்கை சூப், பிரண்டைத் துவையல் போன்றவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அனைத்திற்கும் மேலாக, தயாரிக்கப்படும் பானங்கள் சுகாதாரமான முறையில் இருக்கின்றனவா என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

பிரண்டை

மொத்தத்தில்… நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்யப்படும் இயற்கை பானங்களைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எதற்காக எடுக்கிறோம்… காலச்சூழல் என்ன… உடலுக்கான தேவை என்ன… ஆகிய விஷயங்களைப் புரிந்துகொண்டு எடுப்பதே முறையானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...