Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று சில ஆய்வுகளும், அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...