Skip to main content

Doctor Vikatan: கரும்புள்ளி... முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை; இந்த 6 விஷயங்களில் அலெர்ட்!

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களாக கன்னங்களிலும், நெற்றியிலும் கரும்புள்ளிகளும், கரும்படலமும் ஆரம்பித்திருக்கிறது.

இது என் தன்னம்பிக்கையையே சிதைப்பது போல இருக்கிறது. மருத்துவரிம் கேட்டபோது மங்கு எனப்படும் பிரச்னையாக இருக்கும் என்றும், இதற்கு தீர்வு கிடையாது என்றும் சொல்கிறார். திடீரெனத் தோன்றிய இந்தப் பிரச்னைக்கு உண்மையிலேயே தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்  

சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்


உங்கள் மருத்துவர் சொன்னது போல உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை மங்கு என்பது போன்றே தெரிகிறது. மங்கை ஆங்கிலத்தில் மெலாஸ்மா (Melasma ) என்கிறோம்.

பெரியவர்கள் பலரின் முகங்களிலும் ஆங்காங்கே கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்திட்டுகளைப் பார்த்திருப்போம். அதுதான் மங்கு. கன்னங்களில், மூக்கின் இடையில், நெற்றி, தாடை மற்றும் மேல் உதடு ஆகிய பகுதிகளில் இது அதிகம் காணப்படும். சூரியஒளி அதிகம் படுகிற கையின் மேல்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் சிலருக்கு வரும்.  

ஆண், பெண் இருவருக்கும் இந்தப் பாதிப்பு வரும் என்றாலும் பெண்களுக்கு பாதிப்பு சற்றே அதிகம். குறிப்பாக வெயில் அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கும், கறுப்பான சருமம் கொண்டவர்களுக்கும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

இவைதான் காரணங்கள்...

அதீத சூரிய ஒளி பாதிப்பு. இது தவிர்க்கக்கூடிய காரணம் என்பதால் சூரியனின் தாக்குதலில் இருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம்.

சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் ஏற்படுகிற இந்தப் பிரச்னை, பிரசவமான சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும்.

ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலந்த கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் சிகிச்சை, கர்ப்பத்தைத் தடை செய்கிற காப்பர் டி மாதிரியான கருவிகள் மற்றும் இம்பிளாண்ட்டுகள் போன்றவையும் காரணங்களாகலாம்.

மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்கள் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

சில வகையான மருத்துவ சிகிச்சைகள், உதாரணத்துக்கு புற்றுநோய்க்கான சில பிரத்யேக சிகிச்சைகள், அதிக வாசனை உள்ள சோப், டியோடரண்ட், பாடி வாஷ் மற்றும் அழகு சாதனங்களின் உபயோகம் & இவை எல்லாம் மங்கு பிரச்னையைத் தூண்டும் ஃபோட்டோடாக்சிக் ரியாக்ஷனை ஏற்படுத்தும். 

ஹைப்போதைராய்டிசம். கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் 3 முதல் 9 மாதங்கள் வரை ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் மற்றும் மெலனோசைட்டுகளைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். அதன் விளைவாக ஏற்படுகிற சரும மாற்றம். மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்கள் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

இவை தவிர சருமத்தில் உறுத்தலை ஏற்படுத்துகிற பொருட்களை உபயோகிப்பதும் சிகிச்சைகளை மேற்கொள்வதும் மெலனின் உற்பத்தியைத் தூண்டி, மங்கின் பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

மங்கு பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை. ஆனாலும், வெளிப்புறத் தோற்றத்தை ஓரளவு மேம்படுத்தும் புற சிகிச்சைகள் இருக்கின்றன. சரும நிறத்தை மாற்றக்கூடிய கிரீம்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மங்கின் தீவிரம் மிக அதிகமாக உள்ள இடங்களில் தடவ ஸ்டீராய்டு ஆயின்மென்ட்டுகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார்.

மருத்துவரின் பரிந்துரையின்றி, தவறான முறையில் தவறான அளவுகளில் ஹைட்ரோகுவினான் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினால், exogenous ochronosis  என்கிற பிரச்னை வரலாம். இதிலுள்ள பிளீச்சிங் பொருளின் காரணமாக சருமம் மேலும் கறுத்துப் போகும். ஹைட்ரோகுவினானின் அளவு 4 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கிறபோது ஏற்படுகிற சருமக் கருமையானது நிரந்தரமாக நின்றுவிடும்.

கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், மங்கின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் கிரீம்களில் உலகளவில் ஹைட்ரோகுவினானின் பங்கு தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. மங்கின் கருமை மாறுவதற்கு பதில், சரும நிறத்தில் வேறு மாதிரியான வித்தியாசங்கள் தென்பட ஆரம்பித்தால் ஹைட்ரோகுவினான் கலந்த கிரீம் அல்லது ஆயின்மென்ட் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மங்கு பிரச்னையை முற்றிலும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் போலி விளம்பரங்களை, சிகிச்சைகளை நம்ப வேண்டாம்.

ஹைட்ரோகுவினான் உதவாதபோது, கெமிக்கல் பீல் சிகிச்சை, டெர்மாப்ரேஷன், மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சைகள் பலனளிக்கும். ஆனால் எந்தச் சிகிச்சையிலும் மங்கு முற்றிலும் மறைந்துவிடுவதில்லை. மீண்டும் வரும். 

மங்கு பிரச்னையை முற்றிலும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படும் போலி விளம்பரங்களை, சிகிச்சைகளை நம்ப வேண்டாம். மருத்துவரை அணுகி, முதலில் இது மங்குதானா என்பதை உறுதிசெய்துகொண்டு, முறைப்படி அவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் 'செஹட்' (Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த சிகிச்சைகளை வழங்கி வருகிறார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...