Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும் வலி உயிரே போகிறது. பிறகு மெள்ள மெள்ள வலி குறைகிறது. திடீரென இப்படிப்பட்ட வலி ஏற்பட என்ன காரணம், இந்த வலி சில நாள்களில் சரியாகிவிடுமா, தொடருமா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தெரிகிறது. பிளான்ட்டர் ஃபாஸியா (Plantar Fascia) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும் தடிமனான ஒரு திசு. இந்தத் திசுவானது குதிகால் எலும்பை கால்விரல்களுடன் இணைக்கிறது. பாதத்தின் வளைவுக்கு உறுதியையும் வழங்குகிறது. கால்களின் வடிவத்தைப் பராமரிக்கவும், வாக்கிங், ஜாகிங் மேற்கொள்ளும்போது அந்த இயக்கத்தை ...