Skip to main content

Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack

Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஒரு நபர் திடீரென உயிரிழக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்ட் அட்டாக் பாதிப்பும் ஒன்று. உங்கள் நண்பர் விஷயத்தில் அவரது உடல்நலம் எப்படியிருந்தது, எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தன என்ற விவரங்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும்.

அவரது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருந்தது என்பது முதல் கேள்வி. இதயத்தின் பம்ப்பிங் திறன் குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் போகும் வாய்ப்புகள் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் வென்ட்ரிகுலர் டக்கிகார்டியா (Ventricular tachycardia) அல்லது வென்டிகுலர் ஃபிப்ரிலேஷன்  (Ventricular fibrillation) எனப்படுகிற மிக மோசமான இதயத்துடிப்பு நிலை. இதயத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். 

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  பைபாஸ் கிராஃப்ட்  திடீரென மூடிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பைபாஸ் கிராஃப்ட் என்பது இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை.

இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால்  நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்

இவற்றை சரி செய்ய, அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள வேறு சில ரத்த நாளங்களை எடுத்து அடைபட்ட ரத்த நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இவ்வாறு அடைப்பைத் தவிர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படும் இந்த ரத்த நாள சிகிச்சைதான்  பைபாஸ் கிராஃப்ட்.  இது திடீரென மூடிக்கொள்ளும் நிலையில், மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் பொதுவான கருத்தாகச் சொல்லலாமே தவிர,  உங்கள் நண்பர் விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பைபாஸ் செய்த ஒரே வாரத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...