Doctor Vikatan: என் நண்பனுக்கு சமீபத்தில் ஓர் அறுவைசிகிச்சை நடந்தது. உடலளவில் ரொம்பவும் சோர்வாக இருக்கிறான். அதனால் அவனை அசைவ உணவுகள் சாப்பிடச் சொல்லி அட்வைஸ் செய்தேன். ஆனால், அவனோ, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடக்கூடாது என யாரோ சொன்னதாகச் சொல்கிறான். அது எந்த அளவுக்கு உண்மை? எத்தனை நாள்கள் கழித்து அசைவ உணவுகள் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி அறுவை சிகிச்சை காயங்களுக்கும், அசைவத்திற்கும் முதலில் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த வகையான அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அந்தக் காயம் இருக்கும். பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்தவுடன், இப்போது இருக்கிற நவீன விஞ்ஞான முறைப்படி, மிகவும் எளிதாக ஆறக்கூடிய, விரைவாக ஆறக்கூடிய தையல் (Sutures) போடப்படுகிறது. அதனால், அந்த மாதிரி மேம்பட்ட (Advanced) மருத்துவ முறைகளில், அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்று சொல்வது மிகப் பெரிய பிற்போக்குத்தனம் ஆகும். அதில் முக்கியமாக, அசைவத்தில் நல்ல புரோட்ட...