Skip to main content

Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled - முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது... ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

பச்சை முட்டையா, சமைத்த முட்டையா, எது சிறந்தது என்று பார்த்தால் பச்சை முட்டை நல்லதுதான். பச்சையாக இருக்கும்போது முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும், குறிப்பாக கால்சியம், வைட்டமின் டி, மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.


பச்சை முட்டையில் உள்ள கோலின் (Choline) என்ற சத்து, மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும், மூளைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டது. சமைக்கும்போது இதன் மதிப்பு குறைகிறது. முட்டையில் உள்ள பயோட்டின் எனப்படும் புரதச்சத்தும் சமைக்கும்போது சற்று குறைந்துவிடும்; ஆனால், பச்சையாக இருக்கும்போது இது முழுமையாக உறிஞ்சப்படுகிறது.

பச்சை முட்டையில் சால்மோனெல்லா (Salmonella) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா இருக்கக்கூடும். இந்த பாக்டீரியா சமைக்கும்போது மட்டுமே அழிக்கப்படுகிறது. சில சமயங்களில், அதிக அளவில் பச்சை முட்டை சாப்பிடும்போது இது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தலாம். பச்சை முட்டையில் கிளைக்கோடாக்ஸின் (Glycotoxin) என்ற சத்து இருக்காது. ஆனால், முட்டையைச் சமைக்கும்போது இது சற்றுகூடி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்டது.

முட்டை
முட்டை

ஊட்டச்சத்துகள் அதிகமாக உறிஞ்சப்பட வேண்டும் என நினைப்பவர்கள், குறிப்பாக, குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் 'புல்ஸ் ஐ எனப்படும் ரெசிபி பாணியில் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டையை (two-minutes boil / half-boiled) சாப்பிடலாம். இது மிகவும் நல்லது.

வயதானவர்கள் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் உள்ளவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளும் (கொலஸ்ட்ரால் உள்பட) இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம்.

முட்டை
முட்டை

உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது புரோட்டீன் சத்தை அதிகரிக்க விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு ஐந்து முட்டைகள் வரை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். இதில், இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டை (Two Minutes Boil) மிகவும் சிறந்தது.

இதய நோய், அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் (Egg White) ஒரு நாளைக்கு மூன்று வரை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிட, காலை உணவு நேரமும், மதிய உணவு நேரமும் மிகவும் ஏற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...