Skip to main content

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற மாட்டோம். கர்ப்பப்பையையும், சினைக்குழாய்களையும் மட்டும் நீக்கிவிடுவோம்.

சினைப்பைகளை பத்திரப்படுத்தவே நினைப்போம். அதையும் தாண்டி, சிலருக்கு குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையை நீக்கும்போது சினைப்பைகளையும் நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51 என்று இருக்கிறது. அந்த வயது வரை இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம்.

அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பவை சினைப்பைகள் என்பதால், முடிந்தவரை அவற்றை அகற்றாமல் பத்திரப்படுத்தவே முயல்வோம்.

குழந்தைப்பேற்றை முடித்துவிட்ட பெண்கள், கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால், அதை அகற்றத் தயங்க வேண்டியதில்லை. அப்போதும் சினைப்பைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மருத்துவர் ஆலோசனை
மருத்துவர் ஆலோசனை

கர்ப்பப்பையை அகற்றும்போது, கர்ப்பப்பையின் வாயும் அகற்றப்படும். அதன் விளைவாக சில பெண்களுக்கு வெஜைனா வறண்டுபோவதால்  தாம்பத்திய உறவில் சிக்கல்கள் வரலாம்.

இதைத் தவிர்க்க, 'சப்டோட்டல் ஹிஸ்டரெக்டமி' (subtotal hysterectomy) என்றொரு வழி இருக்கிறது. அதில் கர்ப்பப்பை வாய்ப்பகுதியைத் தக்கவைத்துவிடுவோம். எனவே, வெறும் ப்ளீடிங் தொடர்பான பிரச்னைக்காக மட்டும் கர்ப்பப்பையை நீக்குவோருக்கு, இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...