Skip to main content

Doctor Vikatan: அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு சமீபத்தில் ஓர் அறுவைசிகிச்சை நடந்தது. உடலளவில் ரொம்பவும் சோர்வாக இருக்கிறான். அதனால் அவனை அசைவ உணவுகள் சாப்பிடச் சொல்லி அட்வைஸ் செய்தேன். ஆனால், அவனோ, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடக்கூடாது என யாரோ சொன்னதாகச் சொல்கிறான். அது எந்த அளவுக்கு உண்மை? எத்தனை நாள்கள் கழித்து அசைவ உணவுகள் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி
நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

அறுவை சிகிச்சை காயங்களுக்கும், அசைவத்திற்கும் முதலில் எந்தத் தொடர்பும் கிடையாது. எந்த வகையான அறுவை சிகிச்சை செய்கிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அந்தக் காயம் இருக்கும்.

பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்தவுடன், இப்போது இருக்கிற நவீன விஞ்ஞான முறைப்படி, மிகவும் எளிதாக ஆறக்கூடிய, விரைவாக ஆறக்கூடிய  தையல் (Sutures) போடப்படுகிறது.

அதனால், அந்த மாதிரி மேம்பட்ட (Advanced) மருத்துவ முறைகளில், அசைவம் சாப்பிட்டால் காயம் ஆறாது என்று சொல்வது மிகப் பெரிய பிற்போக்குத்தனம் ஆகும்.

அதில் முக்கியமாக, அசைவத்தில் நல்ல புரோட்டீன் இருக்கிறது. புரோட்டீன்தான் அமினோ அமிலங்கள் (Amino Acids)... அமினோ அமிலங்கள்தான் பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks). அந்த பில்டிங் பிளாக்ஸ்தான், காயங்கள் ஆறுவதற்கு (Healing) இன்னும் வேகமாக நமக்கு உதவும்.

காயங்கள் ஆறுவதில் (Healing) வந்து, நான்கு நிலைகள் (Four Stages) உண்டு. அதில், புரொலிஃபெரேஷன் (Proliferation) என்று ஒரு நிலை, அப்புறம் ரீமாடலிங் (Remodeling) என்று ஒரு நிலை. இந்த புரொலிஃபெரேஷன் நிலையில், அங்கு இருக்கக்கூடிய நமது திசு அளவில் (Tissue Level) ஆறுதல் அப்போதுதான் நடக்கும். அதற்கு, புரோட்டீன்களின் உதவி மிகவும் முக்கியம். அதே மாதிரிதான் ரீமாடலிங்கும்.

அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம்.

ரீமாடலிங் என்றால் என்னவென்றால்,  வெட்டுப்பட்ட இடத்தில், அல்லது அந்த அறுவை சிகிச்சை காயம்பட்ட இடத்தில், பழையபடி அந்தக் காயம் இல்லாமல் மூடுவதுதான் ரீமாடலிங். அதற்கும் புரோட்டீன் முக்கியம்.

அசைவத்தில்தான் புரோட்டீன் அதிகம் நமக்குத் தெரியும். அதுவும், ஜீரணிக்கக்கூடிய (Digestible), எளிதில் கிடைக்கக்கூடிய (Easily Available) மற்றும் முழுமையான புரோட்டீன் (Complete Protein) இருப்பது அசைவத்தில்தான். அதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அசைவம் சாப்பிடுவது காயம் ஆறாது என்று சொல்வதெல்லாம் உண்மையிலேயே மிகப் பெரிய பிற்போக்குத்தனம். 

அசைவம் சாப்பிடுவது உண்மையிலேயே நல்லதுதான். காயம் ஆறுவதற்கு அசைவம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது, இந்த மாதிரிப்பட்ட புரளிகளை நம்ப வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...