Skip to main content

பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே' இருக்கிறதா?

''கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே  குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில், நம்  உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

வைட்டமின் கே
வைட்டமின் கே

''வைட்டமின் 'கே' இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம். 

தாவரங்களில் இருந்து கிடைக்கும்  பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும்  மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. 

நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன.  வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே  மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே.

உடலில்  உள்ள  கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது.

மெனோபாஸ்
மெனோபாஸ்

வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறைய வைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது.

பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு, முட்டை, வெண்ணெய், சீஸ், சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ், கீரைகள்...

தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்'' என்கிறார் ஷைனி சுரேந்திரன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...