Skip to main content

Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பார்த்தேன். வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சரியாகும், குடல் பிரச்னைகள் குணமாகும் என்று அதை சர்வரோக நிவாரணி போல சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... யார், எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார்  சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா.

இயற்கை மருத்துவர் யோ. தீபா
இயற்கை மருத்துவர் யோ. தீபா

வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதிலுள்ள சத்துகள், பலவகைகளிலும் ஆரோக்கியத்துக்கு உதவுவது உண்மைதான்.

சமூக ஊடகங்களில் சமீபகாலமாக வெண்டைக்காய் குறித்து நிறைய தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும், பெண்களின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஆனாலும், இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதற்கான ஆதாரங்கள், நிரூபணங்கள் இதுவரை இல்லை. அதற்குள் போவதற்கு முன், வெண்டைக்காய் தண்ணீர் குறித்துப் பார்ப்போம்.

வெண்டைக்காயை வெட்டி, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும்.

அது தண்ணீரை கெட்டியாக்கி, ஒருவித மணத்தையும் கொடுக்கும். ஆனால், இதில் அறிவியல்பூர்வ நன்மைகள் உள்ளனவா என்பதற்கான ஆய்வுகள் இதுவரை இல்லை.

 வெண்டைக்காய்
வெண்டைக்காய்

ஆனாலும், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதில் தேவையான வைட்டமின்கள், (வைட்டமின் ஏ மற்றும் கே) தாதுச்சத்துகள், மக்னீசியம், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை இருப்பதால், பச்சையாக எடுத்துக்கொள்வதாலேயே அதன் பலன்கள் நமக்குக் கிடைத்துவிடும். ஆனாலும், இதை யாரெல்லாம், எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான ஆய்வுகள் தேவை.

இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும்,  2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன.

அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும்.

குடல் இயக்கம் சீராகும்
குடல் இயக்கம் சீராகும்

2023-ல்  நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பதும் சிலருக்கு செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே, ஃப்ரெஷ்ஷாக சமைத்து உடனே சாப்பிடுவதற்கும், இப்படி இரவு முழுவதும் ஊறவைத்து சமைக்காமல் சாப்பிடுவதற்கும் வேறுபாடுகள் உண்டு.

இதில் ஆக்ஸலேட் அதிகம் என்பதால் கிட்னி ஸ்டோன்ஸ் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். ஆக்ஸலேட் என்பது கால்சியத்துடன் சேர்வதால்தான் கிட்னி ஸ்டோன் உருவாகிறது.

எனவே, எந்த மருத்துவத் தகவலையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவதுதான் சரியானது. சோஷியல் மீடியாவை பார்த்துப் பின்பற்றுவது ஆபத்தானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...