Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்த கொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம் சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டார்கள். உயிரிழப்புகள் குறித்தும் கேள்விப்படுகிறோம். இப்போது பரவும் கொரோனா வீரியம் மிக்கதாக மாறுமா... மீண்டும் லாக்டௌன் அறிவிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானதாக மாறுமா? பதில் சொல்கிறார் ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன். ஒரே நேரத்தில் பல வைரஸ் வகைகள் (variants) பரவுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. உதாரணத்துக்கு, ஃப்ளூ வைரஸையே சொல்லலாம். அது பல வைரஸ் வேரியன்ட்டுகளின் கலவையாகவும், ஒவ்வோர் ஆண்டும் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். வைரஸ் கிருமி ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். ஆனால், பொதுவாக நீண்டகாலமாக மனிதர்களுடன் இருக்கும் வைரஸ்கள், காலப்போக்கில் தம் தீவிரத்தன்மையைக்...