Skip to main content

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக  நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்த கொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம் சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டார்கள். உயிரிழப்புகள் குறித்தும் கேள்விப்படுகிறோம்.  இப்போது பரவும் கொரோனா வீரியம் மிக்கதாக மாறுமா... மீண்டும் லாக்டௌன் அறிவிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானதாக மாறுமா?

பதில் சொல்கிறார் ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும்,  தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன்.

ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன்.

ஒரே நேரத்தில் பல வைரஸ் வகைகள் (variants) பரவுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. உதாரணத்துக்கு, ஃப்ளூ வைரஸையே சொல்லலாம். அது பல வைரஸ் வேரியன்ட்டுகளின் கலவையாகவும், ஒவ்வோர் ஆண்டும் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

வைரஸ் கிருமி ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். ஆனால், பொதுவாக நீண்டகாலமாக மனிதர்களுடன் இருக்கும் வைரஸ்கள், காலப்போக்கில் தம் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இதை உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நோய்ப்பரவலுக்கும் எளிதில் இலக்காகிறவர்கள் முதியவர்கள்தாம்.

அந்த வகையில், இப்போது பரவும் கொரோனாவிலும் அந்த ரிஸ்க் இருக்கிறது. கூடியவரையில் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத தருணங்களில், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும்போதும், பேருந்து, ரயில் பயணங்களின் போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியம். இது அவர்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுகிற அட்வைஸ் அல்ல.

ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும் பழக்கமாக இருக்கிறது.

ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும்  வழக்கமாக இருக்கிறது. இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றவர்கள் மீதான அக்கறையினாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, இப்போது பரவும் கொரோனா குறித்து அச்சம் கொள்வதற்கு பதில், எச்சரிக்கையுடன் இருப்பதுதான் சரியானது.

வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்கள் (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை) உள்ளவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த செய்திகள், ஆதாரமற்றவை. தடுப்பூசி பாதுகாப்பளிக்குமே தவிர, ஆபத்தை ஏற்படுத்தாது. இப்போது பரவும் வைரஸ், ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகத் தெரிகிறது. எனவே, லாக்டௌன் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படாது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...