Skip to main content

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இவை எல்லாம் உங்களுக்கு நடந்திருக்கிறதா என யோசியுங்கள்.

‘ஆபீஸுக்கு இன்னைக்கு என்ன டிரெஸ் போடலாம்?’ என யோசித்துக்கொண்டே செல்போனை பாத்ரூமில் மறந்து வைத்திருப்போம்.

தையோ எடுக்க ஒரு ரூமுக்குப் போய், `இப்ப எதுக்கு இங்க வந்தோம்?’ என யோசித்துக் கொண்டிருப்போம்.

ஞாபக மறதியா அல்லது வியாதியா?
ஞாபக மறதியா அல்லது வியாதியா?

லையிலேயே சீப்பை வைத்துவிட்டு, சீப்பு எங்கே எனத் தேடிக்கொண்டு இருப்போம்.

பாக்கெட்டில் வைத்துக்கொண்டே பர்ஸை தேடிக்கொண்டிருப்போம்.

டுத்தவர் சொல்வதை ‘உம்’ கொட்டியபடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியாது. `ஸாரி... என்ன சொன்னீங்க?’ எனக் கேட்டு அசடுவழிவோம்.

`வீட்டுக் கதவை நன்றாகப் பூட்டினோமா?’ என, வரும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வருவோம்.

இவை வழக்கமாக நடக்கும் விஷயங்கள். இதுபோன்ற மறதி, கவனக் குறைவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இது ஏதும் பிரச்னையா? இதைத் தடுப்பது எப்படி? சொல்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

மூளை
மூளை

''பொதுவாக, மறதி என்பது நல்ல விஷயம். எதையுமே மறக்கவில்லை என்றால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இவற்றில் மூளை தனக்குத் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது.

மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தை மறக்கிறோம் என்றால், அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். ஒரு தகவல் நம் மனதில் பதிவாகும்போது, வேறு ஏதாவது கவனச்சிதறல் இருந்தால், அது நம் மூளையில் பதிவது இல்லை. மனஅழுத்தம், மனச்சோர்வு, சூழல் நெருக்கடி, தூக்கமின்மை, மது, சிகரெட் பழக்கம் என கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் காரணமாக மறதி ஏற்படுகிறது.

நினைவுத்திறன்
நினைவுத்திறன்

நினைவுத் திறன் என்பது ரிமோட், ரீசன்ட், இம்மீடியட் என மூன்று வகைப்படும்.

ரிமோட் - இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை நினைவுகூர்வது.

ரீசன்ட் - நேற்று அல்லது கடந்த வாரம் நடந்ததை நினைவில் கொள்வது.

இம்மீடியட் - கடந்த நிமிடம் நடந்தது, இப்போது செய்யப்போவது போன்றவற்றை உடனுக்குடன் நினைவில்கொள்வது.

இதில் ‘இம்மீடியட் மெமரி’ என்பது, செய்யும் செயலில் முழுக்கவனமும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே நம் மனதில் பதியும். கவனச்சிதறல் இருக்கும்போது, பதிவாகாது.

ந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள்.

செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.

நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.

வ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

ழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம்.

ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்...
ஞாபக மறதியை வெல்ல சில டிப்ஸ்...

ணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஷாப்பிங்குக்காக வெளியே செல்லும்போது, லிஸ்ட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நீங்களாக ஞாபகப்படுத்தி பொருள்களை வாங்குங்கள். இறுதியாக செக் செய்யுங்கள்.

குறைந்தது ஐந்து பேரின் எண்களாவது நினைவில் இருக்கட்டும். இது, உங்களுக்கு ஞாபகசக்தியைக் கொடுப்பதோடு, அவசரத்தில் கை கொடுக்கும்.

வனச்சிதறலைக் கட்டுப்படுத்த, ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

ஸ்போர்ட்ஸ், நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். ஞாபகமறதி வியாதி கிடையாது'' என்று முடிக்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...