Skip to main content

Healthy Food: 5 கலர்ஸ் சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

‘ஒரு நபர் தினமும் 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த காய்கறி, பழங்களையும் குறைந்தது 2 நிறங்களில் இருந்து அதிகபட்சமாக 5 நிறங்களில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஶ்ரீமதி. அவை என்னென்ன நிறங்கள், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அவரே விளக்குகிறார்.

சிவப்பு

5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

சத்துக்கள்: லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிட்டின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin).

பலன்கள்: ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உள்பொருள்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதயநோய், புராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை செல்களை எதிர்க்கும்.

பர்ப்பிள்

5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

சத்துக்கள்: ஃபிளவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin).

பலன்கள்: இதயம், மூளை, எலும்புகள், ரத்த நாளங்கள், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோயை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.

பச்சை

5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

சத்துக்கள்: சல்ஃபோரஃபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இ்ண்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones).

பலன்கள்: கண்கள், ஈறுகள், ரத்த நாளம், நுரையீரல், கல்லீரல், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தன்மையைத் தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும்.

வெள்ளை

5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

சத்துக்கள்: அலிசின், குவர்சிடின், இ்ண்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate).

பலன்கள்: எலும்புகள், ரத்த ஓட்டம், ரத்தநாளங்கள் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளை நிற காய், கனிகள் உணவுகள் உதவும்.

மஞ்சள்

5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!
5 கலர்ல சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க!

சத்துக்கள்: ஜிஸாந்தின் (Zeaxanthin), ஆல்பாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின்.

பலன்கள்: பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்துக்கு நல்லது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...