Skip to main content

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிப்பது வெயிட்லாஸுக்கு உதவுமா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைப்பவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிக்கிறார்கள். வேறு சிலரோ நெய்யை முழுமையாகத் தவிர்க்கிறார்கள். நெய் நல்லதா, கெட்டதா? அந்தக் காலத்தில் நெய் காய்ச்சும்போது அதில் முருங்கைக்கீரை சேர்த்து பொரித்துக் கொடுப்பார்கள். அது இந்தக் காலத்துக்கும் ஏற்றதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகளையும் 'க்ருதம்' என்ற பெயரில் நெய்யில் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். காரணம், நெய்யின் வழியே கொடுக்கும்போது அந்த மருந்தின் கிரகிப்புத்தன்மை சிறப்பாக இருக்கும். அதே சமயம், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது நெய்க்கும் பொருந்தும்.

நாம் உண்ணும் உணவானது எப்படி உட்கிரகிக்கப்படுகிறது, பிறகு அது எப்படி செரிக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். வைட்டமின்கள், மினரல்கள், குறிப்பாக கொழுப்பில் கரையும் மினரல்கள் போன்றவை கொழுப்புச்சத்து இருந்தால்தான் உடலுக்குள் சிறப்பாக உட்கிரகிக்கப்படும்.  ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்', அஜீரண பிரச்னை, வயிற்றுவலி உள்ளிட்ட குடல் ஆரோக்கியம் தொடர்பான  பிரச்னைகளுடன் இன்று நிறைய பேர் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.  அவர்கள் நெய்யில் சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னைகள் கட்டுப்படுவதை உணரலாம்.

வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போரும் நெய் எடுத்துக்கொள்ளலாம். அது கொழுப்பு என்றாலும், எடைக்குறைப்புக்கு உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 மில்லி நெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதில் வெறும் 45 கலோரிகள்தான் இருக்கும். நெய்யை முழுவதும் தவிர்ப்பது தேவையற்றது.

வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சும்போது கடைசியாக அது நுரைத்துவரும்போது சிறிது முருங்கை இலைகளைச் சேர்ப்பார்கள். அது படபடவென வெடிக்கும்.  அதைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும். முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. முருங்கைக்கீரை சூப், முருங்கைக்கீரை பவுடர், கேப்ஸ்யூல் என அது பல வடிவங்களில் வருகிறது. அதையே நெய்யோடு எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

8 மாதக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தினமும் சிறிது நெய் எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருப்பவர்கள், நெய்யில் வறுத்த முருங்கைக்கீரையை தினமும் சிறிது எடுத்துக்கொள்ளலாம். அது கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கண்களுக்கு ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு பார்வை நரம்புகளை வலுப்படுத்த இது உதவும். பார்வை தொடர்பான பிரச்னைகளையும் தவிர்க்கும். 

நெய்

முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய்யை தினமும் ஒன்றிரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். வெயிட்லாஸ் முயற்சியில் இருப்பவர்கள், தினமும் இதை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

முருங்கைக்கீரை சேர்த்துக் காய்ச்சிய நெய், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குழந்தையின்மை பிரச்னையையும் சரியாக்கும். அடிக்கடி களைப்பாகிறவர்கள், எனர்ஜியே இல்லாமல் உணர்கிறவர்களுக்கும் இது மிகச் சிறந்தது. சருமத்தின் பளபளப்புக்கும் உதவும். ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதால், தினமும் இதை எடுத்துக்கொள்வதால் இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும்.  'வெண்ணெய் காய்ச்சவெல்லாம் யாருக்கு இன்று நேரமிருக்கிறது... அதில் முருங்கைக்கீரை நெய் வேறா...' என்று சிலர் கேட்கலாம். முருங்கைக்கீரை இன்ஃபியூஸ்டு நெய் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. நேரமில்லாதவர்கள் தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...