Skip to main content

Posts

அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்... சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுமா?

புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட. அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்! வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு...

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில்  உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய்  இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தக் கருமை நிறப் படலம் மாறுமா? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் நீங்கள் சொல்லும் இந்ப் பிரச்னையை ஆங்கிலத்தில்  'அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ்' (Acanthosis Nigricans) என்றும்,  தமிழில்  'கறுப்பு வெல்வெட் திட்டு' என்றும் சொல்கிறோம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும்போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 2024-ல் வெளிவந்த இந்திய மருத்துவச் சங்கத்தின் ஓர் ஆய்விதழ் கட்டுரைப்படி, தென்னிந்தியாவில் இத்தகைய கறுப்பு வெல்வெட் திட்டுகள் பெண்களிடையே 20 சதவிகிதமும், ஆண்களிடையே 16 சதவிகிதமும் உள்ளதாகத் தெரிகிறது....

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர். தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காத குறைமாதக் குழந்தைகள் மற்றும் தீவிர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இலவசமாக கிடைக்கச் செய்வதே ‘வரம்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தாய்ப்பால் தான முகாமில், தாய்மார்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சூழலில், 153 தாய்மார்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு தாய்ப்பால் தானம் வழங்கினர். ஒரே நாளில் இத்தனை தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியது சாதனையாகப் பதிவாகி, Asia Book of Records-ன் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த முயற்சியில், தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா....  இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்ற பயம் பலருக்கும் இயல்பாக எழுவதுதான். இருப்பினும், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் எந்தவொரு தீவிரமான நோய்த்தொற்றும் பரவ சாத்தியமே இல்லை. தற்போது பல் மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகும் கருவிகள் அனைத்தும் சர்வதேச தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்து, ஆட்டோக்ளேவ் (Autoclave) மூலம் கிருமிநீக்கம் (Sterilization) செய்யப்படுகின்றன. மேலும், ஊசிகள், கையுறைகள், சக்‌ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Disposable) வகையில் கையாளப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 121°C முதல் 134°C வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்...