Skip to main content

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா....  இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத்

பல் மருத்துவர் கிருப்நாத்
பல் மருத்துவர் கிருப்நாத்

பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்ற பயம் பலருக்கும் இயல்பாக எழுவதுதான். இருப்பினும், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் எந்தவொரு தீவிரமான நோய்த்தொற்றும் பரவ சாத்தியமே இல்லை.

தற்போது பல் மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகும் கருவிகள் அனைத்தும் சர்வதேச தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்து, ஆட்டோக்ளேவ் (Autoclave) மூலம் கிருமிநீக்கம் (Sterilization) செய்யப்படுகின்றன.

மேலும், ஊசிகள், கையுறைகள், சக்‌ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Disposable) வகையில் கையாளப்படுகின்றன.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 121°C முதல் 134°C வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்தத்தில் குறிப்பிட்ட நேரம் வைக்கப்படுகின்றன. இந்த வெப்பத்தில்  எப்படிப்பட்ட வீரியமிக்க  வைரஸ்கள், பாக்டீரியாக்கள்  உட்பட அனைத்துக் கிருமிகளும் முற்றிலும் அழிந்துவிடும்.

ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய பிறகு, கருவிகள் நேரடியாக மற்றவருக்குப் பயன்படுத்தப்படாது.

ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய பிறகு, கருவிகள் நேரடியாக மற்றவருக்குப் பயன்படுத்தப்படாது. பலகட்ட சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படும். சுத்தம் செய்யப்பட்ட கருவிகள் கிருமி புகாதபடி, பாக்கெட்டுகளில் பத்திரப்படுத்தப்படும். கிருமிநீக்கம் செய்யப்பட்ட கருவிகள், அடுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் வரை பிரிக்கப்படாது.

தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பொருள்கள் எதுவுமே மறுபயன்பாடு செய்யப்படுவதில்லை. மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் புதிய கையுறைகள் (Gloves) மற்றும் முகக்கவசங்களை (Masks) மட்டுமே பயன்படுத்துவர். 

கருவிகள் மட்டுமன்றி, பல் மருத்துவ நாற்காலி (Dental Chair) உள்ளிட்டவையும், சுற்றியுள்ள பகுதிகளும் ஒவ்வொரு நோயாளி அமர்வுக்குப் பிறகும் மருத்துவ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்பதால் தொற்று பயம் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...