புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட. அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்! வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு...