Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது. இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? இதயம் இடது பக்கம் இருப்பதுதான் காரணம், இதயத்துக்கான டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயமானது, கால்களுக்கு மட்டுமன்றி, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீராக வழங்கக்கூடியது. எனவே, இடதுகால் வலிக்கும் இதயத்திற்கும் நேரடியாக உடலமைப்பு ரீதியான (Anatomical) தொடர்பு இல்லை. ஆனால், அதற்காக இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுக வேண்டியதில்லை. இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி வருவது போல, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் (Peripheral Arterial Disease) கால் வலி வரலாம். தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கால் வலி வரலாம். அ...