Skip to main content

Doctor Vikatan: ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  அவர் இப்போது நலமாக இருக்கிறார். ஆனாலும் அவரது இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோ செய்ய வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பைபாஸ் அறுவைசிகிச்சை செய்த அனைவருக்கும் வழக்கமான சோதனையாக (Routine) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்,  குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் அது அவசியமாகிறது.

அதாவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டாலோ, நடக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சுவலியுடன் இடது கை, தோள்பட்டை, முதுகு அல்லது தாடை வலி இருந்தாலோ, இசிஜி (ECG) அல்லது எக்கோ (Echo) சோதனையில் இதயத்தின் பம்ப் செய்யும் திறன் குறைந்திருப்பது தெரிந்தாலோ, டிரெட்மில் டெஸ்ட் (TMT) அல்லது ஸ்ட்ரெஸ் எக்கோ (Stress Echo) சோதனையில் இதய ரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் இருப்பது உறுதியானாலோ, ட்ரோப்போனின் ஐ (Troponin I) என்ற ரத்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தாலோ, ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை வரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளும்போது, பழைய எக்கோவைவிட புதிதாக எடுக்கப்பட்டதில் பம்ப்பிங் திறன் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம்.

ECG டெஸ்ட்

பைபாஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரத்தக் குழாய்கள் (Grafts) இரண்டு வகைப்படும். ஆர்ட்டீரியல் கிராஃப்ட் (Arterial Graft - LIMA): மார்புப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தமனியில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதில் அடைப்பு வரலாம்.
வீனஸ் கிராஃப்ட் (Venous Graft - Saphenous Vein): காலில் இருந்து எடுக்கப்படும் இந்த நாளத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கும், 10 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் பேருக்கும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இவை தவிர,  சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்கள், புகைப்பழக்கம்  உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு வர வாய்ப்புகள் அதிகம்.  நோயாளிக்கு எவ்வித நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ அல்லது மற்ற உடல் உபாதைகளோ இல்லாமல், இசிஜி மற்றும் எக்கோ சோதனைகள் சீராக இருந்தால், டிரெட்மில் டெஸ்ட் நார்மலாக இருந்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யத் தேவையில்லை.

பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதய நோயை முழுமையாகக் குணப்படுத்தும் (Permanent Cure) சிகிச்சை முறை கிடையாது. இது செய்யப்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். 

பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல.

பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது, அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது கருப்பை (Uterus) அறுவை சிகிச்சை போல, பாதிக்கப்பட்ட உறுப்பை அகற்றி நோயை முழுமையாக நீக்கும் முறை அல்ல.  இது இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தற்காலிகமாகச் சரிசெய்து (Palliative), நோயாளியின் நிலையைத் ஓரளவு முன்னேற்றுவதற்கான (Stabilize)  அவசர கால உதவி மட்டுமே. அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னும்  மீண்டும் பிரச்னை வராமல் தடுக்க சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். ரத்த அழுத்தம் (BP), சர்க்கரைநோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக்  கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்த உறைவைத் தடுப்பதற்கான மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும்.  ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். முறையான மற்றும் அளவான உடற்பயிற்சி அவசியம்.  மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...