Doctor Vikatan: பொதுவாக வெஜைனா பகுதியை தனியே சுத்தம் செய்ய வேண்டாம் என்றே பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகும் இது பொருந்துமா அல்லது உறவு முடிந்ததும் வெஜைனாவை சுத்தம் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவே அந்தப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்தப் பகுதியை தனியே சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில பெண்கள், அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெஜைனா பகுதியை கழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பைக் கழுவுவது, தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. வெஜைனாவின் உள்புறத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அப்படிக் கழுவ சாதாரண தண்ணீர் போதுமானது. சோப், ஹைஜீன...